கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி – 25 சமூக வலைதள கணக்கு மீது வழக்குப்பதிவு

Karur Stampede Case: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி  - 25 சமூக வலைதள கணக்கு மீது வழக்குப்பதிவு

விஜய்

Published: 

29 Sep 2025 18:17 PM

 IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் (Karur) சம்பவம் தொடர்பாக சமூக வலைதளம் மூலம் வதந்தி பரப்பியதாக 25 கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

25 சமூக வலைதள கணக்குகள் மீது வழக்குப்பதிவு

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்ததாக பெறப்பட்ட புகார்களின் பேரில் 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : கரூர் விரையும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்? சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டம்..

சமூக வலைதளங்களில் ஆய்வு

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சென்ற அருணா ஜெகதீசன் அங்கு விஜய் பேசிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் தங்கள் விசாரணைக்கு உதவுமா என காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், செப்டம்பர் 30, 2025 அன்று தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

இதையும் படிக்க : விஜய் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் – நிபுணர்கள் தீவிர சோதனை

இதற்கிடையில் பேட்டியளித்த தவெக விஜய் தரப்பு வழக்கறிஞர் அறிவழகன், கரூர் பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக சதி செய்யப்பட்டதாகவும், அதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் பேசிய அவர், உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் ஒரே இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இவ்வளவு அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.