ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சென்னையில் பரபரப்பு சம்பவம்

Bomb Threat at Rajinikanth’s Home : சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு மர்ம நபர் இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினரின் சோதனையில் அது வெறும் புரளி என தெரியவந்தது.

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - சென்னையில் பரபரப்பு சம்பவம்

ரஜினிகாந்த்

Published: 

12 Oct 2025 06:49 AM

 IST

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த்  (Rajinikanth) தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் ஆன்மிக பயணமாக பத்ரிநாத், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம் செய்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும், ரஜினிகாந்த் எளிய தோற்றத்தில் சாலையோரம் உணவருந்தும் காட்சிகளும் வெளியாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. அவர் வழக்கமாக இமயமலைக்கு ஆன்மிகம் பயணம் செல்வது வழக்கம் அதன் ஒரு பகுதியாக தற்போது நண்பர்களுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு அக்டோபர் 11, 2025 அன்று வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ரஜினிகாந்த்தின் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பிறகு வெடிகுண்டு விடுக்கப்பட்டிருப்பது புரளி என தெரியவந்தது. இந்த தகவல் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி.. பறிபோன உயிர்.. தூத்துக்குடியில் சம்பவம்

சமீப காலமாக பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நடிகைகள், திரிஷா, நயன்தாரா ஆகியோரின் வீடுகள், புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்டவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் சென்னை நீலாங்கரை வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். இதனையடுத்து விஜய்யின் வீட்டுக்கு மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபர்ப்பு நிலவியது.

இதையும் படிக்க : ரேஷன் அரிசி கடத்த வற்புறுத்தல்.. லஞ்சம் கேட்ட 4 போலீசார் கைது!

இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முகமது சபீக் என்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர். மொபைல் எண் மூலம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முகமது சபீக் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதனையடுத்து அவர் கைது செய்யப்ப்டடார். அவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வெடுக்கப்படுவது காவல்துறையினரிடையே பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.