Rajinikanth : ஜெயிலர் 2 ஷூட்டிங் எப்போது முடியும்? நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!
Jailer 2 Shooting Update : இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம்தான் ஜெயிலர் 2. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, ரஜினி ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ரஜினி, ஜெயிலர் 2 ஷூட்டிங் முடிவு பற்றிக் கூறியுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான படம் ஜெயிலர் (Jailer ). இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக நடித்தது அசத்தி இருந்தார். அவ்வாறு இந்த படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் ரஜினிகாந்த் ரீஎண்ட்ரீ கொடுத்துப் போல் இந்த படமானது அமைந்திருந்தது. இதில் நடிகர்கள் மோகன் லால் (Mohan Lal) , சிவராஜ் குமார் என பான் இந்தியப் பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த பாகம் 1ன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ஜெயிலர் 2 படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்த படத்தையும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, நடிகர் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் தொடர்பான அறிவிப்புகள் கடந்த 2025ம் ஜனவரியில் வெளியான நிலையில், அதை தொடர்ந்து 2025, மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. இதைத் தொடர்ந்து இன்று 2025, மே 22ம் தேதியில், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார் ரஜினிகாந்த். அதில் அவர் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் வரும் 2025, டிசம்பர் மாதத்தில் நிறைவடையும் என்று அப்டேட் கொடுத்துள்ளார், தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ :
ஜெயிலர் 2 படப்பிடிப்பு எப்படி போயிட்டு இருக்கு..?
எப்போது முடிவடையும்..? செய்தியாளர் கேள்விக்கு ரஜினி கொடுத்த பதில்..#chennai #Rajinikanth #Jailer2 #Cooli pic.twitter.com/s1Ke42VS6K— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) May 22, 2025
அந்த சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த், கூலி படமானது போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. ஜெயிலர் 2 ஷூட்டிங் நன்றாக நடந்துவருகிறது, எப்போது முடியும் என்று தெரியவில்லை அனேகமாக 2025, டிசம்பர் மாதத்தில் நிறைவடையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
கூலி திரைப்படம் :
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முன்னணி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூலி. ஐந்தில் ரஜினி முன்னணி நாயகனாக நடிக்க அவருடன் ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சத்யராஜ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் நடந்துவரும் நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து வரும் 2026ம் ஆண்டு தீபாவளிக்குத்தான் ஜெயிலர் 2 படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.