விஜய் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் – நிபுணர்கள் தீவிர சோதனை
TVK Vijay : கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடிகர் விஜய்யின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடிகர் விஜய் கரூரில் செப்டம்பர் 27, 2025 அன்று பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு கரூர் விரைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு அறிவித்தார்.
விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் விஜய் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் அறிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தனது கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் கரூர், நாமக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் நீலாங்கரை வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள் விஜய்யின் வீட்டுக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிக்க : தவெக கூட்டத்தில் பங்கேற்ற மேலும் ஒருவர் மரணம்…. பலி எண்ணிக்கை உயர்வு – அதிர்ச்சி தகவல்
விஜய் பேசும்போது மின் தடை ஏற்படுத்தப்பட்டதா?
கரூரில் நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது மின் தடை ஏற்பட்டதாகவும் அதுதான் பெரும் விபத்துக்கு காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த கரூர் மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி, விஜய் நிகழ்விடத்திற்கு வருவதற்கு முன் அந்த இடத்தில் சில மணி நேரம் மின் தடை இருந்தது உண்மை தான். ஆம் கூட்டத்தில் இருந்தவர்கள் மரத்தில் ஏறிய போதும், மின்மாற்றி மீது ஏறிய போதும் மின் தடை செய்தோம்.
எங்கே கிளை முறிந்து லைனில் விழுந்துவிடுவார்களோ, அப்படி நடந்தால், பிரச்னை பெரிதாகிவிடும் என்ற பயத்தில் காவலர்கள் உதவியோடு அவர்களை விரைந்து மீட்டோம். இதற்கிடையில் மின் தடை செய்யப்பட்டது. மரத்தில் இருந்து அவர்கள் இறக்கிவிடப்பட்டமின் அங்கு மின்சாரம் மீண்டும் கொடுக்கப்பட்டது என்றார்.
இதையும் படிக்க : கரூர் கொடூரம்.. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
அண்ணாமலை விஜய்க்கு ஆதரவு
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜய்யை எல்லோரும் கார்னர் செய்ய வேண்டாம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விஜய் துணை நிற்க வேண்டும். சரியான இடத்தை அரசு கொடுக்கவில்லை. கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்று பேசினார்.