திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

Bomb Threat at Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து சிக்கந்தர் தர்காவிலும், திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள மசூதியிலும் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

மாதிரி புகைப்படம்

Updated On: 

10 Dec 2025 18:31 PM

 IST

மதுரை, டிசம்பர் 10 : திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கு, மதுரை (Madurai) உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் தலைமைச்செயலாளர் மற்றும் ஏடிஜிபி ஆகியோர் வரும் டிசம்பர் 17 , 2025 அன்று காணொலியில் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில்  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை, தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு டிசம்பர் 10, 2025 அன்று 3 நேரத்துக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் இந்த வழக்குக்கு தேவையான தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து சிக்கந்தர் தர்காவிலும், திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள மசூதியிலும் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – முதல்வர் அறிவிப்பு

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இந்த நிலையில் வெடி குண்டு நிபுணர்கள் நடத்திய விசாரணையில் மிரட்டல் போலியானது என தெரிய வந்துள்ளது.  இதனையடுத்து மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

இதையும் படிக்க : அதிமுக பொதுக்குழுவில் 8 தீர்மானம் நிறைவேற்றம்…அவை என்னென்ன!

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், மீண்டும் ராம.ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இதுகுறித்து விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதோடு, சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்தார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசுமற்றும் சிஐஎஸ்எஃப் சார்பில் மதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என கடந்த டிசம்பர் 3, 2025 அன்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.  பின்னர் இந்த வழக்கு டிசம்பர் 9, 2025 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், தலைமை செயலர் மற்றும் ஏடிஜிபி ஆகியோர் காணோலி வாயிலாக டிசம்பர் 17, 2025 அன்று ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

சிக்கலில் இண்டிகோ விமான சேவை.. எனினும் டிக்கெட் விற்பனையாவது எப்படி?
திருமணமான அடுத்த 4வது நாளில் படப்பிடிப்பில் சமந்தா
5 வயது சிறுவனை தாக்க முயற்சித்த சிறுத்தை.. சாதுரியமாக செயல்பட்டதால் தப்பிய சம்பவம்..
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?