தோல்வி பயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்..

Vanathi Srinivasan Statement: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது என வானதி சீனிவாசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக மதசார்பின்மை பாடம் எடுப்பது வேடிக்கையாக இருக்கிறது என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வி பயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்..

கோப்பு புகைப்படம்

Published: 

27 Jun 2025 08:10 AM

 IST

முருக பக்தர்கள் மாநாட்டை பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். 2025 ஜூன் 22ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி சார்பாக நடைபெற்றது. அதில் பாஜக அதிமுக உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் முதல் கலந்து கொண்டனர். இலட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். இந்த நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் வெற்றியால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது, சிறுபான்மையினர் ஓட்டுக்காக அடிப்படை வாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு மதவாதம் பற்றி பேச உரிமை இல்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானத்த சீனிவாசன் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் அறிக்கை:

இது தொடர்பான அவரது அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என வழக்கமாக கூறும் அவதூறை பேசியுள்ளார். மத்திய அரசு திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை செயல்படுத்துவது மாநில அரசு அதிகாரிகள் ஊழியர்கள் தான். இந்த திட்டங்கள் அனைத்தும் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசுக்கு எதிராக இந்திய தேசியத்திற்கு எதிராக எண்ணத்தை தமிழ்நாடு மக்களிடம் விதைக்கும் வகையில் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தோடு மத்திய அரசை, முதலமைச்சர் ஸ்டாலின் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருக்கிறார் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்த முருக பக்தர்கள் மாநாடு:


முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா போன்ற தலைவர்களை விமர்சிக்கும் வகையில் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்ட நிலையில் அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மதுரையில் 5 லட்சத்திற்கும் அதிகமான முருக பக்தர்கள் திரண்ட மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்பதை அவரது திருப்பத்தூர் அரசு விழாவில் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என வானத்தை ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு மக்களை மதத்தால் ஜாதியால் பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்வதாக பாஜக மீது அரசு விழாக்களில் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். சிறுபான்மையினரின் வாக்கு வங்கி அரசியலுக்காக மத அடிப்படை வாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது திமுக. இதனால் மதத்தைப் பற்றி பேச எந்த உரிமையும் திமுகவிற்கு இல்லை என தெரிவித்துள்ளார்

வக்பு சட்ட திருத்தத்தின் போது மதத்தின் பக்கம் நிற்கும் திமுக இந்து மதம் இந்து கடவுள் என்று வரும்போது மட்டும் மதசார்பின்மை பேசுகிறது. இப்படி வேடதாரிகள் பாஜகவுக்கு மதசார்பின்மை பாடம் எடுப்பது வேடிக்கையாக இருக்கிறது என விமர்சித்துள்ளார்.

பயத்தில் திமுகவும், கூட்டணி கட்சிகளும்:

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சனாதன தர்மத்தை கொசு போல் ஒழிக்க வேண்டும் என ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சனாதன தர்மமான இந்து மதத்தை கொசு போல் ஒழிக்க வேண்டும் என பேசிவிட்டு தமிழ்நாட்டில் இந்து மதத்திற்கு ஆபத்து இல்லை என்கிறார். இதை விட வெறுப்பு அரசியல் இருக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றால் முருக பக்தர்கள் மாநாட்டால் பாஜகவுக்கு பலன் இல்லை என்றால் முதலமைச்சர் ஸ்டாலினும் திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் மகிழ்ச்சி தானே அடைய வேண்டும். ஆனால் தினமும் அதை பற்றி பேசி பேசி மாய்கிறார்கள், புலம்பி தீர்க்கிறார்கள் இந்த மாநாடு அவர்களிடைய பெரும் கலக்கத்தை, நடுக்கத்தை தோல்வி பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என அந்த அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் வான்தி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Follow Us
Related Stories
சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த விமான முனையம்… எப்போது திறக்கப்படும்… வெளியான முக்கிய தகவல்!
யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு!!
சென்னையில் ஓப்பன் டாப் பேருந்து திட்டத்துக்கு கைவிரிப்பு.. சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி.. என்ன காரணம்!
சென்னை டூ கேரளம் பருந்து போல பறக்கலாம்.. வருகிறது புல்லட் ரயில் சேவை… திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கேட்பு!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. எங்கெல்லாம் தெரியுமா..? வானிலை நிலவரம் இதோ..
Poonamalle Constituency Election 2026: வேகமான நகர்புற வளர்ச்சியை காணும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி.. வெற்றி யாருக்கு?
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..