49வது சென்னை புத்தக கண்காட்சி.. ஜன. 7 முதல் 19 வரை.. எங்கே? முழு விவரம்..

Chennai Book Fair: 48வது புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு நடத்தப்பட்ட நிலையில், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான 49வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 7ஆம் தேதி தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சி, வழக்கம்போல் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது.

49வது சென்னை புத்தக கண்காட்சி.. ஜன. 7 முதல் 19 வரை.. எங்கே? முழு விவரம்..

கோப்பு புகைப்படம்

Published: 

06 Dec 2025 07:30 AM

 IST

சென்னை, டிசம்பர் 6, 2025: புத்தகப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 49வது புத்தகக் கண்காட்சி 2026 ஜனவரி மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அந்த வகையில், 49வது சென்னை புத்தகக் கண்காட்சி வரவிருக்கும் 2026 ஜனவரி 7ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சுமார் 13 நாட்கள் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் அனைத்து விதமான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்படும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறும்.

புத்தகக் கண்காட்சிக்காக பலரும் காத்திருக்குவது வழக்கம், ஏனெனில் தேவையான புத்தகங்களை ஒரே இடத்தில் வாங்கிச் செல்லும் வாய்ப்பு இதன் சிறப்பாகும். மேலும், அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளும் கண்காட்சியில் நடத்தப்படும். பொதுவாக 500 முதல் 700 அரங்குகள் வரை அமைக்கப்படுவது வழக்கம்.

49வது சென்னை புத்தக கண்காட்சி:

48வது புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு நடத்தப்பட்ட நிலையில், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான 49வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 7ஆம் தேதி தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சி, வழக்கம்போல் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: ஒரு முதல்வர் போடும் பதிவா இது? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..

இந்த புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்படும் எனவும், விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு கட்டணம் பெறப்படும்; ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெறும் நேர அட்டவணை:

வழக்கமாக இந்த புத்தகக் கண்காட்சி விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை, வேலை நாட்களில் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இயங்கும். இந்த ஆண்டும் அதே நேர அட்டவணை பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: விஜய்யுடன் காங்கிரஸ் மூத்த நிர்வாகி பேச்சுவார்த்தை.. தமிழக அரசியலில் பரபரப்பு!!

புத்தகக் கண்காட்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் முழு வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தயாரிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புத்தகப் பிரியர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து நூல்களையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

ஓய்வு குறித்து முதன்முறையா மனம் திறந்த கமல்ஹாசன்!
ஸ்மிருதி மந்தானா மற்றும் பலாஷின் திருமணம் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சை
முகேஷ் அம்பானி தினமும் ரூ.5 கோடி செலவழித்தால், அவரது சொத்து காலியாக எவ்வளவு நாட்களாகும்?
இனி ரயில்களில் சாதாரண ஸ்லீப்பர் கிளாஸிலும் தலையணை போர்வை கிடைக்கும்