தூத்துக்குடி பட்டினமருதூரில் அகழாய்வு பணிகள்… தமிழக தொல்லியல் வரலாற்றில் புதிய மைல்கல்
Pattinamaruthur Excavation Begins : தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் பகுதியில் அகழாய்வு பணிகள் மார்ச் 18, 2026 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இந்த பகுதி வர்த்தக நகரமாக இருந்தது கண்டுபடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரவாக பார்க்கலாம்.

பட்டினமருதூர் பகுதியில் அகழாய்வு பணிகள்
தூத்துக்குடி, மார்ச் 18 : தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் பகுதியில் அகழாய்வு பணிகள் மார்ச் 18, 2026 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 2025 – 26 பட்ஜெட்டில் இந்த பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வு பணிகள் இந்திய தொல்லியல் துறை அனுமதியுடன் தொல்லியல் துறை நிபுணர் அஜய் குமார் தலைமையிலான குழுவினார் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் சைட் டைரக்டராக அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் கட்டமாக இந்த பகுதியில் கிரில் புள்ளிகள் அடிப்பைடையில் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 20 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலம் கொண்ட பகுதியில் அகழாய்வுக்கான பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் மண் அகற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பட்டினமருதூர் பகுதி பண்டைய காலத்தில் கீழ்பட்டினம் என அழைக்கப்பட்டதாகவும், அந்த பகுதி தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தக மையமாக இருந்திருக்கலாம் என்றும் தொல்லியல் நிபுணர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : R. Sakkarapani Tamil Nadu Election: தோல்வியை கண்டிராத தொடர் வெற்றியாளர் சக்கரபாணி… ஒட்டன்சத்திரம் தொகுதியில் 7- ஆவது முறை வெற்றியை பதிவு செய்வாரா!
இதற்கான ஆதாரமாக இங்கு தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பானைகள் மற்றும் குடங்கள், மண் கலசங்களின் துண்டுகள், சிறிய தொல்லியல் பொருட்கள் போன்றவை கண்டுபடிக்கப்பட்டுள்ளன. இவை அந்த பகுதியின் பழமையான வரலாற்றையும் வர்த்தக செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டும் முக்கிய ஆதாரங்களாக கருதப்படுகின்றன.
இந்த அகழாய்வின் மூலம் அந்த பகுதியில் மக்கள் வாழ்ந்த காலகட்டம், அவர்களின் வாழ்க்கை முறைகள், கடல்சார் வர்த்தக தொடர்புகள், கலாச்சார பரிமாற்றங்கள் போன்ற தகவல்கள் வெளிவரும் என கருதப்படுகிறது. இதுகுறித்து இந்த அகழாய்வை மேற்பார்வையிடும் அஜய் குமார் கூறுகையில், தற்போது இந்த பகுதியில் இதுவரை கிடைத்த ஆதாரங்கள், மிக வலுவான தொடக்க சான்றுகள் இந்த பகுதியில் வர்த்த நகரமாக இருந்திருப்பதற்கான சாத்தியங்களை நமக்கு சொல்கிறது. மேலும் அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை காலவரிசை அடிப்பைடையில் ஆய்வு செய்து இந்த பகுதியின் வரலாற்றை அறிவியல் ரீதியாக உறுதி செய்யவுள்ளோம் என்றார்.
இதையும் படிக்க : இனி வெளுக்க போகும் மழை..எந்தெந்த ஊர்களில் தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கீழடி, கொடுமணல் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் பெரிய வரலாற்று உண்மைகளை நமக்கு எடுத்து சொல்லியது. பட்டினமருதூர் அகழாய்வும் இதே போல புதிய தகவல்களை வெளிப்படுத்தும் என வரலாற்று ஆய்வாளர்கள் ம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த பணிகள் மூலம் தென் தமிழ்நாட்டில் கடல்சார் வர்த்தகம் குறித்து மேலும் பல உண்மைகளை சொல்லும் என நம்புகின்றனர்.