ஒரு பக்கம் த.வெ.க.. மற்றொரு பக்கம் அதிமுக.. இன்று சென்னையில் நடக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..

தற்போதைய நிலவரத்தின்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு கிட்டத்தட்ட 116 இடங்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இன்னும் இரண்டு இடங்கள் தேவைப்படுகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களின் ஆதரவு கிடைத்தால், தமிழக வெற்றி கழகம் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் ஆட்சி அமைக்கக்கூடும்.

ஒரு பக்கம் த.வெ.க.. மற்றொரு பக்கம் அதிமுக.. இன்று சென்னையில் நடக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..

கோப்பு புகைப்படம்

Published: 

09 May 2026 09:47 AM

 IST

சென்னை, மே 9, 2026: தமிழக அரசியல் களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக இருந்து வரும் சூழலில், தற்போது வரை அதனால் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காத காரணத்தினால், மற்ற கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறது.

ஆட்சி அமைக்க முயற்சிக்கும் தவெக:

தற்போதைய நிலவரத்தின்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு கிட்டத்தட்ட 116 இடங்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இன்னும் இரண்டு இடங்கள் தேவைப்படுகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களின் ஆதரவு கிடைத்தால், தமிழக வெற்றி கழகம் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் ஆட்சி அமைக்கக்கூடும்.

கடந்த மூன்று முறை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும், தற்போது வரை அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும் படிக்க: தவெக ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்.. நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் நடந்த உச்சகட்ட பரபரப்பு..

அதிமுகவின் அடுத்த பிளான் என்ன?

இந்த நிலையில், அதிமுக தரப்பில் திமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நேற்றைய தினம் தமிபிதுரை குறிப்பிடுகையில், “எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார்” என தெரிவித்திருந்தார். ஒருபக்கம் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் சூழலில், அதிமுகவும் மறுபக்கம் முயற்சி செய்து வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்:

இந்த நிலையில், சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக Puducherryயில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி