’வைகோ நன்றி மறந்தவர்… இது நல்லதல்ல’ காட்டமாக விமர்சித்த ஜெயக்குமார்!

AIADMK Former Minister Jayakumar : மதிமுக பொதுச் செயலாளர் நன்றி மறந்துவிட்டு பேசுவது நல்லதல்ல என்றும் அதிமுகவால் தான் மதிமுகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தனது வாழ்நாள் தவறு என வைகோ கூறிய நிலையில், அதற்கு ஜெயக்குமார் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

’வைகோ நன்றி மறந்தவர்... இது நல்லதல்ல காட்டமாக விமர்சித்த ஜெயக்குமார்!

ஜெயக்குமார் - வைகோ

Updated On: 

11 Jul 2025 15:48 PM

சென்னை, ஜூலை 11 : மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை (MDMK Chief Vaiko) தனிப்படை முறையில் தனக்கு பிடிக்கும் என்றும் ஆனால், அவர் நன்றி மறந்தவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (AIADMK EX Minister Jayakumar) கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு தான் மதிமுகவுக்கு அங்கீகாரமே கிடைத்தது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதாவை சந்தித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று வைகோ கூறிய நிலையில், அதற்கு ஜெயக்குமார் இவ்வாறு பதில் கொடுத்துள்ளார்.  2025 ஜூலை 11ஆம் தேதியான இறு சென்னை எழும்பூரில் அழகுமுத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். இதன் பின், செய்தியாளர்கள் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

’வைகோ நன்றி மறந்தவர்’

அப்போது பேசிய அவர், “வைகோ மீது மிகுந்த மரியாதை உள்ளவன் நான். தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு பிடிக்கும். அவர் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். நன்றியை மறப்பது நன்றன்று. அவர் நன்றியை மறக்கக்கூடாது. அதிமுகவால் தான் மதிமுகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஜெயலலிதாவால் பல கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மதிமுகவுக்கும் அங்கீகாரம் கிடைத்ததை ஜெயலலிதா தான் காரணம்.

அதையெல்லாம் மறந்துவிட்டு வாய் கூசாமல் ஒரு கட்சியை இழிவுபடுத்தி பேசுவதும், மறைந்த தலைவரை பற்றி பேசுவதும் அவரது பண்புக்கு நல்லதல்ல. திமுகவை போற்றி புகழுங்கள். நீங்கள் திமுகவை விமர்சிக்காத வார்த்தை கிடையாது. திமுகவிடம் எதிர்பார்த்து அதிமுகவை குறைசொல்கிறார்.

Also Read : NDA கூட்டணியில் நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்.. தடாலடியாக சொன்ன எடப்பாடி பழனிசாமி!

காட்டமாக விமர்சித்த ஜெயக்குமார்

நன்றி மறக்காதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார். முன்னமாக கட்சி கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனறு நினைத்தவன் அல்ல நான். அன்று திருச்சி திமுக மாநாட்டுக்கு செல்லாமல் போயஸ் கார்டனுக்கு சென்று அதிமுகவுடன் கூடடணி வைத்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு” என கூறினார்.

வைகோ இந்த கருத்துக்கு அதிமுகவில் பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த  நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.  தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், ”பொம்மை முதலமைச்சர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது.

Also Read : எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..

சட்டம் ஒழுங்கை சீர்செய்ய வேண்டிய திமுக இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை கூட ஒழுங்காக ஒருங்கிணைக்கவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். எங்கள் கொடி பறக்கக் கூடாது. தவெக கொடி பறக்கக் கூடாது. அப்போ திமுக கொடி மட்டும் பறக்காலாமா. ஏன் இந்த பாகுபாடு. இதனை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள் தமிழக மக்கள்”  என கூறினார்.