ஸ்டாலினை கடுமையாக அட்டாக் செய்த எடப்பாடி…அனல் பறந்த பேச்சு!
EPS Strongly criticized C M Stalin: சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மீது எடப்பாடி கே. பழனிசாமி வார்த்தைக்கு வார்த்தை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்து போனது .

ஸ்டாலின் மீது எடப்பாடி கடும் விமர்சனம்
சென்னை, வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: காங்கிரஸின் கூட்டணி அழுத்தத்திற்கு திமுக அடிபணிந்தது. திமுக கருணாநிதி குடும்பமாக மாறிவிட்டது. கருணாநிதி குடும்பத்திலும், ஸ்டாலின் குடும்பத்திலும் இருந்தவர்களுக்கு மட்டுமே ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வழங்கப்பட்டு வருகிறது. திமுகவில் எவ்வளவோ அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் இருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் பதவி எதற்காக வழங்கப்பட்டது. திமுகவில் உள்ள மூத்த தலைவரான துரைமுருகனை எதற்காக துணை முதல்வர் பதவியில் அமர வைக்கவில்லை. திமுகவில் உழைக்கும் நபர்கள் ஓரம் கட்டப்படுகின்றனர்.
கொள்ளை புறமாக ஆட்சிக்கு வந்த திமுக
ஆனால், அதிமுகவில் அப்படி இல்லை. அதிமுக ஜனநாயக இயக்கமாகும். உழைப்பவர்கள் உச்சபட்ச பதவிக்கு வர முடியும். வரும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 525 வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தது. இதில், நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளை புறமாக ஆட்சிக்கு வந்த பிறகு அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை.
மேலும் படிக்க: ஊழல் பட்டியலில் உள்ள திமுகவினருக்கு அதிமுக ஆட்சியில் தண்டனை…எடப்பாடி ஆவேசம்!
திமுக அரசின் வெற்று வாக்குறுதிகள்
இதில், முக்கியமாக கல்வி கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், அரசு காலி பணியிடங்கள் 3 லட்சம், அரசு சார்ந்த காலி பணியிடங்கள் 2 லட்சம் என 5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்திருந்தனர். இதில், வெறும் 50 ஆயிரம் பேர் மட்டுமே அரசுப் பணியில் பணியாற்றப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் திட்டங்கள் திமுக ஆட்சியில் தடுத்து நிறுத்தம்
கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. அம்மா மினி கிளினிக் கைவிடப்பட்டது. அம்மா இரு சக்கர வாகனம் உள்ளிட்ட மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதுதான் திமுக அரசின் சாதனையாகும். அதிமுக தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
திமுகவை வீட்டுக்கு அனுப்பு நாள்…
2026 தேர்தல் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுகவே ஆட்சி அமைக்கும். தேர்தல் அறிவிப்பு வந்ததும் வலுவான கூட்டணி அமைக்கப்படும். கட்சி மீது நம்பிக்கை இல்லாமல் ஸ்டாலின் பேசுகிறார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டனர். அந்த நாளுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெல்வதை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஸ்டாலினை கடுமையாக அட்டாக் செய்த எடப்பாடி…அனல் பறந்த பேச்சு!