அதிமுகவும் பாஜகவும் இணக்கமாக இல்லையா? திருமாவளவனுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
EPS Breaks Silence : திருவள்ளூரில், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பலவீனமடைந்தால் தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அதிமுக, பாஜகவுடன் இணக்கமாக இல்லை எனவும் கருத்து வெளியிட்டார். இந்த நிலையில் திருமாவளவனின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

திருமாவளவன் - எடப்பாடி கே.பழனிசாமி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் (Thirumavalavan), “கூட்டணி அரசியல் புதியது அல்ல. 1967ம் ஆண்டிலிருந்து திமுகவும் அதிமுகவும் அரசியலில் இரண்டு துருவங்களாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இருவரும் மக்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றுள்ளன. உண்மையில், இவை இரண்டும் பெரிய வாக்கு வங்கிகளை வைத்துள்ள கட்சிகள்,” என்றார். மேலும் அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என்றும் பேசினார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, (Edappadi K Palaniswami) கோயம்புத்தூரில் மக்கள் முன்னிலையில் பேசினார். அப்போது பேசிய அவர் திருமாவளவனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.
திருமாவளவனின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம்
கோயம்புத்தூரில் மக்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவும் பாஜகவும் இணக்கமாக இல்லை என திருமாவளவன் சொல்கிறார். எங்களுக்கும் எங்கள் கூட்டணிக்கும் இணக்கம் இல்லை என சொல்வதற்கு அவர் யார்? நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய அமித்ஷா, எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பேசினார். எங்கள் கூட்டணியின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டார் என்று பேசினார்.
பாஜகவுடனான கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளிக்கும் வீடியோ
#Live மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
இன்று: கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதிகள் #மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம் https://t.co/XjuDAv9ig1
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) July 8, 2025
கூட்டணி குறித்து திருமாவளவன் பேசியதாவது
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் “கூட்டணிகளில் இணக்கமாக இருந்தாலும், ஆட்சியில் இடமளிக்கப்படாததன் பின்னணியில் கூட்டணி கட்சிகள் பலவீனமடைந்துள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. கூட்டணி ஆட்சி என்பது பொதுவாக ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சிகள் உறுதியற்ற நிலையில் இருக்கும்போதுதான் உருவாகிறது. இதை மத்திய அரசியல் வரலாறும் காட்டுகிறது,” எனக் கூறினார்.
இதையும் படிங்க: ராமதாஸ் புறக்கணிப்பு! கூட்டணி முடிவுக்கு ராமதாஸூக்கு மட்டுமே.. பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
அதிமுக தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதால், அவர்கள் கூட்டணி ஆட்சிக்கு தயாராக உள்ளார்களா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது என்றார். இருப்பினும், தற்போதைய தேர்தலில் அந்த அளவிற்கு நிலைமை உருவாகியதாகத் தெரியவில்லை என்றும், கூட்டணி ஆட்சி விவாதத்தை முதலில் தொடங்கிய கட்சி விசிக தான் என்றும் கூறினார்.
திமுக அல்லது அதிமுக கட்சிகளில் ஒருவேளை பலவீனம் அடைந்தால் தான், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாக வாய்ப்பு இருக்கும். ஆனால் தற்போது, ஆட்சி நடத்த இயலாத அளவிற்கு இரு கட்சிகளும் பலவீனமடைந்துவிட்டதாக சொல்ல முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து திருமாவளவனின் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.