கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் புதிய மூவ்.. காஞ்சிபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறார்!!
காஞ்சிபுரத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தொண்டர் படையுடன் சேர்ந்து மக்கள் பாதுகாப்புப் படையும் ஏற்பாடுகளை கவனித்து வருகிறது. கல்லூரி வளாகத்தின் உள் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 2000 பேர் மட்டுமே கலந்துக்கொள்ளும் வகையில், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, கல்லூரியை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
சென்னை, நவம்பர் 23: தவெக தலைவர் விஜய் இன்று காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் மக்களை சந்திக்க உள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி, விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்து, வார இறுதி நாட்களில் ஒவ்வொரு மாவட்டமாக பயணம் மேற்கொண்டு வந்தார். அந்தவகையில், திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்தார். கடைசியாக கடந்த செப்.27ம் தேதி அவர் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, ஒரு மாத காலமாக அரசியல் செயல்பாட்டில் இருந்து முற்றிலும் முடங்கியிருந்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின், மீண்டும் தனது அரசியல் செயல்பாட்டை தொடங்கியுள்ளார்.
இதையும் படிக்க : எய்ம்ஸ் வராது… மெட்ரோவையும் வரவிட மாட்டோம்…. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
மீண்டும் விஜய் சுற்றுப்பயணம்:
அந்தவகையில், டிச.4 முதல் மீண்டும் சுற்றுப்பயணத்ததை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தார். ஆனால், கார்த்திகை தீபம், பாபர் மசூதி இடிப்பு தினம் போன்ற காரணங்களை கூறி, பாதுகாப்பு வழங்குவது சிரமம் என்பதால் வேறு தேதிக்கு பிரச்சார தினத்தை மாற்றும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். இதையடுத்து, தனது பயண திட்டத்தை மாற்றும் திட்டங்கள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இதனிடையே, காஞ்சிபுரத்தில் இன்று மக்களை சந்திக்க உள்ளார்.
காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்கிறார்:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சி முழுவதும் உள்ளரங்கில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு 2,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்யூஆர் குறியீடு நுழைவுச் சீட்டு:
இதற்காக, தவெக சார்பில் க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நுழைவுச் சீட்டுடன் வருபவர்கள் மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என தவெக சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:
குறிப்பாக, கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் முதல் மக்கள் சந்திப்பு என்பதால், இன்றைய கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், இருக்க முழுக்க முழுக்க உள்ளரங்கு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யபட்டுள்ளது. சந்திப்பு நடைபெறும் கல்லூரி வளாகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் சூழ்ந்து பலத்த பாதுகாப்பை வழங்கும் வகையில் ஈடுபடுவர் எனத் தெரிகிறது. அதோடு, கூடுதலாக போலீஸ் பாதுகாப்பும் கேட்கப்பட்டுள்ளது.