அதிமுக எம்.பி தம்பிதுரை மருத்துவமனையில் அனுமதி
admk mp thambidurai hospitalized: அதிமுக எம்.பி தம்பிதுரை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப அக்கட்சி தொண்டர்கள் வாழ்த்தி வருகின்றனர். அதோடு, கட்சியின் மூத்த தலைவர்கள் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலா மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக எம்.பி தம்பிதுரை உடல் நலக்குறை காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர், மார்ச் 1998 முதல் ஏப்ரல் 1999 வரை வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில், சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்களுக்கான கேபினட் அமைச்சராகவும், தரைவழி போக்குவரத்து இணையமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பு,1985 முதல் 1989 வரை மக்களவையின் துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார். 2009, 2014 தேர்தல்களில் அதிமுக சார்பில் கரூரில் போட்டியிட்டு வென்றுள்ளார். தற்போது அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராகச் செயல்பட்டு வரும் இவர், அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் உள்ளார்.
உடல்நலக்குறைவு:
ஏற்கெனவே இருக்கு கடந்த 2018ல் நெஞ்சுவலி ஏற்பட்டு இதே அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை எப்படி உள்ளது போன்ற தகவல்கள் குறித்து மருத்துவமனை தரப்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இதனிடயே, அதிமுக மூத்த தலைவர்கள் நேரடியாக மருத்துவமனை சென்று தம்பிதுரையின் உடல்நலன் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.



