குருவி கூட்டை எடுக்க சென்ற சிறுவன்.. மின்சாரம் தாக்கி பலியான சோகம்!
9 Year Old Boy Died in Namakkal | நாமக்கலில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் மின்மாற்றியில் இருந்த குருவி கூட்டை எடுக்க முயற்சி செய்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
நாமக்கல், ஆகஸ்ட் 18 : நாமக்கலில் (Namakkal) மின்மாற்றியில் இருந்த குருவி கூட்டை எடுக்க முயற்சி செய்த 9 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சிறுவனை மீட்ட அந்த பகுதி மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குருவி கூட்டை எடுக்க சென்ற சிறுவன் – மிசாரம் தாக்கி பரிதாப பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு 9 வயதில் சஞ்சய் என்ற மகன் இருந்தார். சஞ்சய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வார விடுமுறையில் வீட்டில் இருந்த சஞ்சய் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே உள்ள மின்மாற்றியில் குருவி கூடு ஒன்று இருப்பதை அவர் பார்த்துள்ளார்.
இதையும் படிங்க : பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்.. லேப்டாப்பை பார்த்து மனமுடைந்த மனைவி.. விபரீத முடிவு!
மின்மாற்றியின் மீது ஏறியபோது மின்சாரம் தாக்கியது
குருவி கூட்டை எடுக்க வேண்டும் என்ற ஆசையில் சிறுவன் மின்மாற்றி மீது ஏறிய நிலையில், மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். சிறுவன் மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததை கண்ட பொதுமக்கள் உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : யூடியூப் பார்த்து பங்குச் சந்தையில் முதலீடு.. ரூ.2.5 லட்சம் இழந்த பெண்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குருவி கூட்டை எடுப்பதற்காக மின்மாற்றி மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.