சென்னையில் குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி பலி…. டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
Chennai road tragedy : சென்னை தண்டையார்பேட்டையில் பள்ளியில் இருந்து திரும்பி வரும் வழியில் குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி குப்பை லாரி மோதி உயிரிழந்துள்ளார். குப்பை லாரி டிரைவரை பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மாதிரி புகைப்படம்
சென்னை, நவம்பர் 7 : சென்னை (Chennai) தண்டையார்பேட்டையில் நடந்த விபத்தில், 8 வயது சிறுமி குப்பை லாரி மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கைலாசம் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். அவரது மனைவி சாரளா. இத்தம்பதியருக்கு ஒரு மகனும், காவ்யா என்ற 8 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் நவம்பர் 7, 2025 அன்று சிறுமி காவ்யா வழக்கம் போல பள்ளிக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல தாமதமானதால் அவரை ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை அவறது உறவினர் வீட்டுக்கு பைக்கில் அழைத்து வந்த போது இந்த விபத்து (Accident) ஏற்பட்டிருக்கிறது.
விபத்தில் 8 வயது சிறுமி பலி
தாமதமாக சென்றதால் சிறுமியை பள்ளியில் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உறவினர் அவரை ஸ்கூட்டியில் வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது அவர் முன் பக்கம் எரிவாயு சிலிண்டர் ஒன்றையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தண்டையார்பேட்டை கைலாசம் தெரு அருகே வளைவில் திரும்பியபோது, முன் பக்கம் இருந்த சிலிண்டர் பாரம் தாங்காமல் வண்டி கிழே சரிந்திருக்கிறது. இந்த நிலையில் வண்டியில் இருந்து கிழே விழுந்த சிறுமி காவ்யா மீது பின் பக்கமாக வந்த குப்பை லாரி அவர் மீது மோதியிருக்கிறது.
இதையும் படிக்க : தண்ணீர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து.. ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்த சோகம்..
டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குப்பை லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்களிடம் இருந்து லாரி டிரைவரை மீட்ட அவர்கள் அவரை கைது செய்தனர்.
இதையும் படிக்க : திருப்பூரில் 17 வயது சிறுமி கர்ப்பம்… தந்தையும் காதலனும் போக்சோவில் கைது – பரபரப்பு சம்பவம்
குப்பை லாரி மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவமனையில் சிறுமியின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை நெகிழ செய்தது. குப்பை லாரி டிரைவரை மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் 8 வயது சிறுமி தாமதமாக வந்ததாக கூறி, பள்ளி அவரை திருப்பி அனுப்பிய சம்பவமும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.