2026 புத்தாண்டில் கிடைத்த மகிழ்ச்சி.. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 545 குழந்தைகள்..

New Year born babies: புத்தாண்டில் பிறந்த குழந்தைகள், வாழ்வில் முன்னேற்றம், மகிழ்ச்சி என அனைத்தையும் தரும் “புத்தாண்டுப் பரிசு” போல் நினைக்கப்படுகின்றனர். இந்த நாளில் பிறப்பு என்பது பெற்றோருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகவும், புதிய ஆண்டை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றும் இனிய ஆசீர்வாதமாகவும் விளங்குகிறது.

2026 புத்தாண்டில் கிடைத்த மகிழ்ச்சி.. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 545 குழந்தைகள்..

புத்தாண்டில் 545 குழந்தைகள் பிறந்தன

Updated On: 

02 Jan 2026 10:58 AM

 IST

சென்னை, ஜனவரி 02: நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், புத்தாண்டு தினத்தில் தமிழ் நாடு முழுவதும் பல குழந்தைகள் பிறந்து புதிய உயிர் உலகிற்கு வந்துள்ளன. அவ்வாறு, நேற்று (2026 ஜனவரி 01), தமிழக அரசு மருத்துவமனைகளில் மட்டும் மொத்தமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண்டின் முதல் நாளில் பிறப்பவர்கள், ஆங்கில புத்தாண்டுடன் தங்களது பிறந்தநாளையும் இணைத்து சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வார்கள். புதிய ஆண்டுடன் சேர்ந்து பிறக்கும் அந்தச் சிறிய உயிர்கள், குடும்பத்திற்கும் உலகிற்கும் புதிய நம்பிக்கையையும் இனிய தொடக்கத்தையும் அளிப்பதாக கருதப்படுகின்றன.

இதையும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்..

சென்னையில் பிறந்த 46 குழந்தைகள்:

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 46 குழந்தைகள் பிறந்தன. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 21 குழந்தைகள் (15 பெண், 6 ஆண்), கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் (4 பெண், 3 ஆண்), திருவல்லிக்கேணி கஸ்தூர்பா மருத்துவமனையில் 6 குழந்தைகள், ராயப்புரம் RSRM மருத்துவமனையில் 12 குழந்தைகள் (7 பெண், 5 ஆண்), புதிய பிறந்த குழந்தைகளை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்வமுடன் வரவேற்று, பெற்றோருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

பிற மாவட்டங்களில் பிறந்த குழந்தைகள்:

காஞ்சிபுரத்தில் 8 குழந்தைகள், செங்கல்பட்டில் 20 குழந்தைகள், கோவையில் 11, நீலகிரியில் 6 குழந்தைகள், திருப்பூரில் 13, வேலூரில் 8 குழந்தைகள், திருவண்ணாமலையில் 22 குழந்தைகள், திருப்பத்தூரில் 12, ராணிப்பேட்டையில் 6 குழந்தைகள், கன்னியாகுமரியில் 6, ஈரோட்டில் 12 குழந்தைகள், திண்டுக்கலில் 20, தேனியில் 13 குழந்தைகள், கடலூரில் 13, கள்ளக்குறிச்சியில் 47, விழுப்புரத்தில் 27 குழந்தைகள், மதுரையில் 22, சிவகங்கை 7, ராமநாதபுரம் 6, விருதுநகர் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

இதையும் படிக்க: Happy New Year 2026: புத்தாண்டை கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்ற மக்கள்!

நேற்று மாலை வரை மட்டும் பிறந்த குழந்தைகள்:

நெல்லையில் 24, தூத்துக்குடியில் 12, தென்காசியில் 20 குழந்தைகள், திருச்சியில் 13, பெரம்பலூரில் 10, படுக்கோட்டை 14, கரூர் 4 குழந்தைகள், கிருஷ்ணகிரி 15, தர்மபுரி 13, நாமக்கல் 10, சேலம் 29 குழந்தைகள், தஞ்சை 22, திருவாரூர் 3, நாகை 6, மயிலாடுதுறை 16 குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு, நேற்று (ஜனவரி 1) நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை, தமிழக அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 545 குழந்தைகள் உலகிற்கு வந்துள்ளன.

அதேபோல், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் புத்தாண்டு நாளில் 26 குழந்தைகள் (12 ஆண், 14 பெண்) பிறந்துள்ளனர்.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி