Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெற்ற தாய் செய்த கொடூரம்… 3 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை.. திருச்செந்தூரில் அதிர்ச்சி!

Tuticorin Crime News : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பெற்ற தாயே குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் தான் மர்ம நபர் கொன்றதாக தாய் நாடகமாடி இருக்கிறார். இதனை அடுத்து, போலீசார் விசாரணையில் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதை தாய் பார்வதி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பெற்ற தாய் செய்த கொடூரம்… 3 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை.. திருச்செந்தூரில் அதிர்ச்சி!
மாதிரிப்படம்Image Source: Pinterest
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 May 2025 07:29 AM

தூத்துக்குடி, மே 10 : தூத்துக்குடி மாவட்டத்தில் 3 வயது சிறுமியை தாய் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், 3 வயது குழந்தையை கொன்ற தாய், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. முன்னதாக, மர்ம நபர் நகை பறிக்க முயன்றபோது, குழந்தைய அவர் கொன்றதாக தாய் நடமாடியிருக்கிறார். இருப்பினும், போலீசார் நடத்திய விசாரணையில், தான் குழந்தையை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குமார்புரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (38). இவர் பட்டறை நடத்தி வருகிறார்.

3 வயது குழந்தையை கொன்ற தாய்

இவரது மனைவி பார்வதி (36). இந்த தம்பதிக்கு 8 வயததில் ஸ்ரீதேவ் என்ற மகனும், 3 வயதில் ஆதிரா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், 2025 மே 7ஆம் தேதி மகள் ஆதிராவுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, திடீரென பார்வதி கூச்சலிட்டு இருக்கிறார். இதனால், அக்கம் பக்கத்தினர் உடனே அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது, அவர் மர்ம நபர் வீட்டிற்கு வந்த தாலியை கழற்றி தரக் கூறி குழந்தையின் கழுத்தை நெரித்து மிரட்டியதாகவும், இதனால், தங்க தாலியை கொடுத்தபோது, குழந்தை மயங்கி விழுந்துள்ளதாகவும் பார்வதி கூறியிருக்கிறார். குழந்தை மயங்கி விழுந்ததால், அந்த நபர் தாலியை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அக்கம் பக்கத்தினரிடம் பார்வதி கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த, அக்கம் பக்கத்தினர் மயங்கிய நிலையில் கடந்த குழந்தையை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நடந்தது என்ன?

தகவல் அறிந்து சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மேலும், தாய் பார்வதியிடம் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டர். அப்போது சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது, தாய் பார்வதி குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகம் ஆடியது தெரியவ்நதுள்ளது.

மேலும், பெண் பார்வதி மனநலம் பாதிக்கப்படவர் எனவும் கடந்த ஓராண்டாக திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் இதற்காக சிசிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது. குழந்தையின் கழுத்தை நெரித்து பார்வதி கொலை செய்துவிட்டு, நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, போலீசார் பார்வதியை கைது செய்தனர். பெற்ற தாயே  குழந்தையை கொலை செய்தது அப்பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கூட, திசையன்விளையில் திருமணத்திற்கு மீறிய உறவுக்காக 4 வயது குழந்தையை தாய்  கொடூரமாக கொலை செய்துள்ளார். குழந்தைக்கு  மது கொடுத்து கொன்றுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, தாய் உட்பட 3  இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்
ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்...
மீண்டும் அதே கூட்டணி.. அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!
மீண்டும் அதே கூட்டணி.. அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!...
”மனித வெடிகுண்டாக மாற தயார்" அமைச்சர் சொன்ன பகீர் தகவல்
”மனித வெடிகுண்டாக மாற தயார்
ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?
ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?...
அரசு, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைந்த உணவியல் கல்வி..!
அரசு, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைந்த உணவியல் கல்வி..!...
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்...
கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்?- பேச்சுவார்த்தை தீவிரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்?- பேச்சுவார்த்தை தீவிரம்...
சித்ரா பௌர்ணமி.. தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு
சித்ரா பௌர்ணமி.. தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு...
பெற்ற தாய் செய்த கொடூரம்... 3 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை
பெற்ற தாய் செய்த கொடூரம்... 3 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை...
தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் சொன்ன தகவல்
தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் சொன்ன தகவல்...