தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் கண் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள், எழுத்துகளும், தூரப்பார்வை காரணமாக கரும் பலகையில் இருக்கும் எழுத்துகளை சரியாக பார்க்கமுடியாத நிலை ஏற்படும். இதனை ஆரம்ப நிலையிலேயே சரி செய்தால், பெரும் பிரச்சனை தவிர்க்கலாம். அதற்காகவே, தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு

Updated On: 

21 Nov 2025 07:38 AM

 IST

சென்னை, நவம்பர் 21: தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வரும் கண் பரிசோதனையில் இதுவரை 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வளர்ந்து வரும் இந்த நவீன காலத்தில் டிவி, ஸ்மார்ட்போன் என்பது நகரம் முதல் கிராமம் வரை அனைத்து வீடுகளிலும் கட்டாயம் இருக்கும் பொருள்கள் ஆகிவிட்டது. இதில், போன்களை பெரியவர்கள் பயன்படுத்துவதை விட, அந்த வீட்டில் உள்ள சிறுவர்களே அதிகம் பயன்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. இப்படி டிவி, செல்போன் பயன்பாடு குழந்தைகளிடம் அதிகரிக்கத் தொடங்கியதின் விளைவாக, அவர்களுக்கு உடல் செயல்பாடு என்பது வெகுவாக குறைய தொடங்கியது. இதன் காரணமாக இன்றைய குழந்தைகள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை இளமை காலத்திலேயே சந்திப்பது வாடிக்கையாகி விட்டது. அதில், குறிப்பாக பெரும்பாலான குழந்தைகளுக்கு முதலில் வருவது கண் பார்வை குறைபாடு தான்.

இதையும் படிக்க : கோவைக்கும், மதுரைக்கும் “NO METRO”.. தமிழ்நாட்டை பழிவாங்குவதா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!

நாள் முழுவதும் டிவி, செல்போன்:

அதாவது, நாள் முழுவதும் செல்போன், டி.வி முன் அமர்ந்து தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சல், தலைவலி, கண்களில் நீர்வடிதல் போன்ற பிரச்சனைகள் வரத்தொடங்கும். வசதி உள்ள பெற்றோர் அவர்களது பிள்ளைகளை தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து கண்களுக்கு கண்ணாடி தேவை என்றால் வாங்கிக் கொடுக்கின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இலவச கண்ணாடி திட்டம்:

இப்படி கண்பார்வை குறைபாடு ஏற்படுவதால் மாணவர்களின் தொடக்கக் கல்வியே பெரிதம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதனை தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கண் பாதிப்புக்கு ‘பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்’ மூலம் ஆண்டுக்கு சராசரியாக 3 லட்சம் மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் நிருபர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளி மாணவர்களுக்கான கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

கண் நோய்களின் பரவல் விகிதம்:

தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்களுக்கு கண்புரை (Cataract) – 82%, விழித்திரை பாதிப்பு (Retinal disorders) – 5.6%, நீரிழிவு காரணமான விழித்திரை பாதிப்பு (Diabetic Retinopathy) – 1%, கண் நீரழுத்தம் (Glaucoma) – 1.3%, மற்ற கண் தொடர்பான பிரச்சினைகள் 10.1% ஆக உள்ளது. மொத்தத்தில் 14.3% பார்வை குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சரியான கண் கண்ணாடி வழங்குவதன் மூலம் கண் பார்வை சரி செய்யப்பட உள்ளதாக கூறினார்.

2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு:

மேலும், நடப்பு ஆண்டு இதுவரை மாநிலம் முழுவதும் 27,90,093 பள்ளி மாணவர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதில் 2,00,214 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : +2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!

தொடர்ந்து, மீதமுள்ள மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், பரிசோதனைகள் முடிவடைந்த பின்னர், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 3 லட்சம் மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?