வங்கி லாக்கரில் இருந்த 2 கிலோ தங்க நகைகள் நூதன கொள்ளை.. சிக்கிய பெண்.. சென்னையில் பரபரப்பு..

குறிப்பிட்ட புர்கா அணிந்த பெண், வங்கிக்கு வெளியில் வந்து ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். அந்த பெண் ஆட்டோவில் ஏறி பல்வேறு பகுதிகளில் சுற்றிவிட்டு, அங்குள்ள வணிக மால் ஒன்றிற்குள் போயிருக்கிறார். வணிக மாலில் உள்ள கழிவறைக்கு சென்ற அந்த பெண், புர்கா உடையை கழற்றிவிட்டு சேலை அணிந்த நிலையில் வெளியில் வந்திருக்கிறார்.

வங்கி லாக்கரில் இருந்த 2 கிலோ தங்க நகைகள் நூதன கொள்ளை.. சிக்கிய பெண்.. சென்னையில் பரபரப்பு..

சிக்கிய வங்கி பெண் ஊழியர்

Updated On: 

04 Apr 2026 08:24 AM

 IST

சென்னை வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல தனியார் வங்கி கிளையின் மேலாளர் அகில பாரதி (46) என்பவர் வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், வங்கியில் ஒரு பையில் ஒன்றே முக்கால் கிலோ எடையுள்ள தங்க நகைகள் அனாதையாக கிடந்தது. இந்த நகைகள் யாருடையது? என்று தெரியவில்லை. புர்கா அணிந்த மர்ம பெண் ஒருவர் வங்கிக்கு வந்ததாகவும், அவர்தான் இந்த நகைகளை போட்டுவிட்டு சென்றதாகவும் சந்தேகிப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: திருவண்ணாமலையில் 53 வெண்கல சுவாமி சிலைகள் கடத்தலா? தேர்தல் பறக்கும் படை விசாரணை!

சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை:

அதோடு, அந்த பெண் வங்கிக்குள் சற்று சாதாரணமாக நடமாடியுள்ளார். அவர் யார்? என்று விசாரிக்கும்படி மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த புர்கா அணிந்த பெண், வங்கியின் லாக்கர் உள்ள பகுதிக்கும் சென்றுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி குறிப்பிட்ட பெண் யார்? என்றும், அவர்தான் அந்த நகைகளை போட்டுவிட்டு சென்றாரா? என்பது குறித்தும் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொள்வதாக கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை நடத்தினார்கள். பின்னர் வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்தார்கள். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட புர்கா அணிந்த பெண் வங்கிக்குள் நுழைந்து நடமாடிய காட்சிகள் பதிவாகியிருந்தன.

ஆட்டோவில் வளம் வந்த பெண்:

அந்த பெண் வங்கிக்குள் இருந்த நாற்காலியில் வாடிக்கையாளர் போல உட்கார்ந்திருக்கிறார். அவர் உட்கார்ந்த நாற்காலிக்கு கீழ்தான் அனாதையாக கிடந்த தங்க நகைகளும் கண்டெடுக்கப்பட்டது தெரியவந்தது.  மேலும் குறிப்பிட்ட புர்கா அணிந்த பெண், வங்கிக்கு வெளியில் வந்து ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். அந்த பெண் ஆட்டோவில் ஏறி பல்வேறு பகுதிகளில் சுற்றிவிட்டு, அங்குள்ள வணிக மால் ஒன்றிற்குள் போயிருக்கிறார். வணிக மாலில் உள்ள கழிவறைக்கு சென்ற அந்த பெண், புர்கா உடையை கழற்றிவிட்டு சேலை அணிந்த நிலையில் வெளியில் வந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி, அதே பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது.

வங்கியில் பணிபுரியும் பெண்:

குறிப்பிட்ட அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்த வங்கி நிர்வாகத்தினர், அந்த பெண் தங்களது வங்கி கிளையிலேயே வேலை பார்ப்பதாகவும், தற்போது விடுமுறையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த பெண், வங்கியில் உள்ள லாக்கரின் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றுவது தெரியவந்தது. அந்த பெண் அதிகாரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குறிப்பிட்ட அந்த பெண் அதிகாரியின் பெயர் பத்மபிரியா (38) என்பதாகும். இவர் வாடிக்கையாளர்கள் வங்கியில் வைத்துள்ள நகைகளை தந்திரமாக தெரிந்துகொண்டு, 2 வாடிக்கையாளர்களிடம் பேசி, புயல் அவர்கள் மூலம் வங்கியில் சாவியை வாங்கியுள்ளார். பின்னர் வங்கியில் அவர்கள் வைத்துள்ள நகைகளை நூதனமாக கொள்ளையடித்துள்ளார்.

ஏற்கெனவே திருடி சிக்கிய பெண்:

ஒரு வாடிக்கையாளரின் வங்கியில் இருந்த சுமார் 300 கிராம் நகைகளை கொள்ளையடித்த பத்மபிரியா மீது விஷயம் தெரிந்து ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.அந்த வழக்கில் கைதாகி, பத்மபிரியா ஏற்கனவே சிறைக்கு சென்று வந்துள்ளார். 2-வதாக மற்றொரு வாடிக்கையாளரின் வங்கியில் இருந்த நகைகளை பெண் அதிகாரி பத்மபிரியா நைசாக திருடி சென்றுள்ளார். 2-வது முறையாகவும் தான் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று பயந்துபோன பெண் அதிகாரி பத்மபிரியா, புர்கா அணிந்து வேடமிட்டு வந்து குறிப்பிட்ட நகைகளை வங்கியின் லாக்கருக்குள்ளேயே வைத்துவிட்டு செல்ல முயற்சித்துள்ளார். அது முடியாமல் போகவே நகைகளை வங்கியில் அனாதையாக போட்டுவிட்டு பத்மபிரியா நைசாக தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிக்க: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… பள்ளி மாணவரின் வக்கிர செயல்… நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

சிறையில் அடைப்பு:

‘வேலியே பயிரை மேய்வது போல’, வங்கியின் லாக்கருக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்த பத்மபிரியா வாடிக்கையாளர்களின் லாக்கரில் இருந்து சுமார் 2 கிலோ நகைகளை நூதனமாக கொள்ளையடித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.தீவிர விசாரணைக்கு பிறகு பத்மபிரியா நீதிமன்ற காவலில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பத்மபிரியா வேளச்சேரியில் சொந்த வீட்டில் வாழ்வதாகவும், திருமணமான அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Follow Us
ரயில் டிக்கெட் ரத்து செய்வதில் புதிய மாற்றம் - இனி முழு கட்டணமும் திரும்ப கிடைக்காது!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்
துல்கர் சல்மானுடன் மோதலா? டோவினோ தாமஸ் அதிரடி பதில்!
மீண்டும் சரிந்த தங்கம் விலை.