பைக்கில் பெற்றோருடன் சென்ற கைக் குழந்தைக்கு நேர்ந்த கதி…ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Erode Crime: ஈரோடு மாவட்டத்தில் பெற்றோருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மோதியதில், 11 மாதமே ஆன பெண் குழந்தை சாலையில் தவறி விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பைக்கில் பெற்றோருடன் சென்ற கைக் குழந்தைக்கு நேர்ந்த கதி...ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஈரோட்டில் பைக் மீது கார் மோதியதில் 11 மாத குழந்தை பலி

Published: 

29 Jan 2026 08:23 AM

 IST

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி மற்றும் 11 மாதமே ஆன தேஜி என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், காட்டுப்பாளையத்தில் சத்தியமூர்த்தியின் உறவினரின் இல்ல நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சத்தியமூர்த்தி அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோருடன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். குழந்தையை, ப்ரியா தனது மடியில் வைத்திருந்தார். இந்த நிலையில், காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது, அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக தனது பைக்கை சத்தியமூர்த்தி திருப்பினார். அப்போது, அந்த வழியாக எதிர் திசையில் வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சாலையில் தலை குப்புற விழுந்த குழந்தை

இந்த விபத்தில் சத்தியமூர்த்தி, அவரது மனைவி பிரியா, குழந்தை ஆகியோர் சாலையில் விழுந்தனர். இதில், தாயின் மடியில் இருந்த குழந்தை தேஜி சாலையில் தலை குப்புற விழுந்தது. இதில், குழந்தைக்கு
தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். உடனே, குழந்தையை அவரது பெற்றோர்கள் மீட்டு அருகில் உள்ள அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க: வெடிகுண்டை அழிக்கும் பணி… காவலருக்கு ஏற்பட்ட சோகம்… படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

தீவிர சிகிச்சையில் பிரிந்த குழந்தையின் உயிர்

அப்போது, குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அவசர ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு, குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்திலேயே குழந்தை தேஜி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்தது பெற்றோர் மருத்துவமனையிலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

இந்த நிகழ்வு அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக, கார் ஓட்டுநரான ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையத்தை சேர்ந்த புஷ்பராஜ் (35 வயது) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Chennai Crime: சென்னையை உலுக்கிய ட்ரிபிள் மர்டர்.. மனைவியின் உடலை தேடும் பணியில் போலீசார்.. நடந்தது என்ன?

Related Stories
பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து…எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!
காவல் நிலையத்தில் தந்தை-மகள் விஷம் குடித்த சம்பவம்..தென்காசியில் 3 காவலர்கள் சஸ்பெண்ட்…எஸ்.பி.மாதவன் அதிரடி உத்தரவு!
வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை..கிலோ கணக்கில் கடல் அட்டைகள்-குதிரைகள் பறிமுதல்..ராமநாதபுரத்தில் பரபரப்பு!
இந்தியா – ஐரோப்பா ஒப்பந்தம்: வர்த்தகத்திற்கே முக்கியத்துவம்.. உக்ரைன் அல்ல – அமெரிக்கா கடும் விமர்சனம்..
தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்?..எப்போது தாக்கல் செய்யலாம்…அரசு தீவிர ஆலோசனை!
நிர்வாகிகளுடன் ஆலோசனை.. யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ஓபிஎஸ்
ஷிம்லாவில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஹெரிடேஜ் டாய் டிரெயின்
பைக்கில் செல்வது தோனி - கோலியா? வைரலாகும் வீடியோ
அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்குமா?
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல் - அப்படி என்ன ஸ்பெஷல்?