Asia Cup 2025: கில்லை விட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு.. ஆசியக் கோப்பையில் இடமில்லையா..? முன்னாள் இந்திய வீரர் கருத்து!

India's Asia Cup 2025 Opener: ஆகாஷ் சோப்ரா, 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில்லுக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிக வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். டி20 போட்டிகளில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டு வருவதால், மூன்றாவது தொடக்க வீரரின் தேவை குறைவு என்கிறார்.

Asia Cup 2025: கில்லை விட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு.. ஆசியக் கோப்பையில் இடமில்லையா..? முன்னாள் இந்திய வீரர் கருத்து!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில்

Published: 

17 Aug 2025 13:45 PM

2025 செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை 2025க்கான (2025 Asia Cup) இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான போராட்டத்தில், சுப்மன் கில்லை (Shubman Gill) விட யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) சற்று முன்னிலை வகிப்பதாகவும், அணியின் பேட்டிங் வரிசையை சமநிலைப்படுத்துவதில் தேர்வாளர்கள் ஒரு தந்திரமான முடிவை எதிர்கொள்ள நேரிடும் என்றும் முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்தநிலையில், 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு வாய்ப்பு..?


சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் என இருவரும் ஒரு வருடத்திற்கு மேலாக டி20 போட்டிகளில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தொடக்க வீரர்களாக களமிறங்கி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பின்வரிசையில் திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா என வலிமையான மிடில் ஆர்டரும் இந்திய அணிக்கு செட் ஆகிவிட்டது.

ALSO READ: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும்..? யாருக்கு தலைமை பொறுப்பு..?

இதை இதற்கு மேல் கலைக்கவோ, சேர்க்கவோ முடியாது. இதுப்போன்ற சூழ்நிலையில் இதுகுறித்து பேசிய சோப்ரா, “முந்தையை 15 பேர் கொண்ட டி20 அணியை கணக்கிடும்போது, இந்திய அணியில் மூன்றாவது தொடக்க வீரர் இல்லை என்பதால், உங்களுடன் ஒரு தொடக்க வீரரை வைத்திருப்பது முக்கியம். அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தங்கள் பார்மை இழந்தால், யார் அடுத்த தொடக்க வீரர் என்று இதுவரை நாம் நினைத்ததில்லை. ஆனால், டி20 உலகக் கோப்பைக்கு 3வது தொடக்க வீரர் வைத்திருப்பது முக்கியம்.

டி20 புள்ளிவிவரங்களின்படி, சுப்மன் கில்லை விட யஷஸ்வி ஜெய்ஸ்வால் சற்று முன்னிலையில் உள்ளார். யஷஸ்வி டி20 விளையாடும் விதம் அருமையாக உள்ளது. ஒருவேளை நீங்கள் சுப்மன் கில்லை 3வது தொடக்க வீரராக தேர்ந்தெடுத்தால், உங்கள் டெச்ட் கேப்டனாக, ஒருநாள் துணை கேப்டனை டி20 போட்டிகளில் பெஞ்சில் அமர வைப்பது அவ்வளவு அழகாக இருக்காது.” என்றார்.

ALSO READ: ஆசியக் கோப்பையை அதிக முறை வென்ற அணி எது..? முதலிடத்தில் கெத்துக்காட்டும் இந்தியா!

சஞ்சு குறித்து ஆகாஷ் சோப்ரா:

தொடர்ந்து சஞ்சு சாம்சன் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “ சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் எப்படி செயல்படுவார் என்பது நமக்கு தெரியாது. திலக் மற்றும் சூர்யகுமார் யாதவை 3 மற்றும் 4 வது இடங்களில் விளையாட வைத்து, 5வது இடத்தில் சஞ்சு சாம்சனா..? இது நல்ல திட்டமாக இருக்காது. 5வது இடத்தில் யாராவது வேண்டுமென்றால் ஜிதேஷ் சர்மாவை களமிறக்கலாம். ஏனென்றால், ஜிதேஷ் ஐபிஎல்லில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார். ” என்றார்.