WPL 2026: பெங்களூரு அடுத்தடுத்து தோல்வி.. முன்னேறிய மும்பை.. புள்ளிகள் அட்டவணையில் யார் ஆதிக்கம்?
WPL 2026 Points Table: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
மகளிர் பிரீமியர் லீக் 2026ல் (WPL 2026) ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) தொடர்ந்து 2வது தோல்வியைச் சந்தித்தது. நேற்று அதாவது 2025 ஜனவரி 26ம் தேதி வதோதராவில் உள்ள BCA ஸ்டேடியத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, புள்ளிகள் அட்டவணையில் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் நிலையை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், பிளேஆஃப் பந்தயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோல்வியடைந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளும் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், டெல்லி 3வது இடத்திலும், குஜராத் 4வது இடத்திலும் உள்ளன. யுபி வாரியர்ஸ் 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. எனவே, எந்த அணிகள் முதல் மூன்று இடங்களுக்குள் நுழையும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ALSO READ: முச்சல் மீது அடுக்கடுக்கான புகார்.. ஸ்மிருதி நண்பருக்கு எதிராக அவதூறு வழக்கு!
மும்பை vs பெங்களூரு போட்டி நிலவரம்:
1⃣0⃣0⃣* runs
5⃣7⃣ balls
1⃣6⃣ fours
1⃣ sixFor her memorable and historic knock, Natalie Sciver-Brunt is named the Player of the Match 💯🏅
Relive her innings ▶️ https://t.co/fZnOiOflJx#TATAWPL | #KhelEmotionKa | #RCBvMI pic.twitter.com/aelorJFa7X
— Women’s Premier League (WPL) (@wplt20) January 26, 2026
டாஸ் வென்ற பிறகு, ஆர்சிபி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன் காரணமாக, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. மும்பை அணிக்காக நாட் ஸ்கைவர்-பிரண்ட் அற்புதமாக பேட்டிங் செய்து 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார். இது மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் சதமாகும். அவரது இன்னிங்ஸ் மும்பை அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. மேலும், ஹேலி மேத்யூஸும் தன் பங்கிஏகு 56 ரன்களுடன் வெளியேறினார்.
ஆர்சிபி அணிக்காக லாரன் பெல் 2 விக்கெட்டுகளையும், ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் நாடின் டி கிளார்க் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலக்கை நெருங்கிய பெங்களூரு:
200 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்மிருதி மந்தனா வெறும் 6 ரன்களுக்கு ஆரம்பத்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும், ரிச்சா கோஷ் ஒரு முனையில் நின்று 0 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் உதவியுடன் 90 ரன்கள் எடுத்து அசத்தினாலும், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லத் தவறிவிட்டார். நாடின் டி கிளார்க்கும் 28 ரன்கள் எடுத்து முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
ALSO READ: விரைவில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடரா? ராஜீவ் சுக்லா பதில்!
மும்பை அணியின் பந்துவீச்சில் ஹேலி மேத்யூஸ் முக்கிய பங்கு வகித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்சிபி அணிக்கு ஒரு அடியாக அமைந்தது மட்டுமல்லாமல், பிளேஆஃப் போட்டியையும் இன்னும் சுவாரஸ்யமாக்கியது.