WTC 2027-29: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இனி 12 அணிகள்.. சுவாரஸ்யத்தை தூண்டும் ஐசிசி.. சிறிய அணிகளுக்கு வாய்ப்பு!

ICC World Test Championship 2027-29: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தற்போது விளையாடும் 9 அணிகள் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகும் . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடங்கியது.

WTC 2027-29: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இனி 12 அணிகள்.. சுவாரஸ்யத்தை தூண்டும் ஐசிசி.. சிறிய அணிகளுக்கு வாய்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027-29

Published: 

12 Nov 2025 11:30 AM

 IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (World Test Championship) 4வது சீசன் 2025 ஜூன் மாதம் தொடங்கி 2027ம் ஆண்டு முடிவடையவுள்ளது. அதன்பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சீசன் இறுதிப்போட்டிக்கு பிறகு, 2027-29ம் ஆண்டு ஒரு புதிய சுழற்சி தொடங்கும். இருப்பினும், 2027 இல் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர ஐசிசி (ICC) திட்டமிட்டுள்ளது. சமீபத்திய நடந்த ஐசிசி வாரியக் கூட்டத்தில் இதுகுறித்து ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. சிறிது காலமாக, WTC இல் இரண்டு அடுக்கு அமைப்பு பற்றிய யோசனை விவாதத்தில் இருந்தது. இதன் கீழ், 12 டெஸ்ட் விளையாடும் அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட உள்ளன. இருப்பினும், இப்போது ஒரு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் எப்போது? முழு விவரம் இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பெரிய மாற்றம்:


டெஸ்ட் விளையாடும் 12 அணிகளும் 2027 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 9 அணிகள் மட்டுமே விளையாடுகின்றன. இருப்பினும், இப்போது மேலும் 3 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த 3 அணிகள் ஆப்கானிஸ்தான் , ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து என்று கூறப்படுகிறது. இந்த மூன்று அணிகளும் சர்வதேச போட்டிகளில் டெஸ்ட் விளையாடினாலும், இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை. இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த 3 அணிகளுக்கு வாய்ப்பை கொடுத்து கிரிக்கெட்டை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல ஐசிசி திட்டமிட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக, ஐ.சி.சி மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இருப்பினும், நிதி இல்லாததாலும், சிறிய அணிகளுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளாலும், இதைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. மறுபுறம், இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற முக்கிய அணிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து சிறிய அணிகளின் பங்கேற்பு உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்த அணிகள் கீழ் பிரிவுக்கு தரமிறக்கப்பட்டால், ஒரு பிரிவில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட அணிகளுக்கு எதிராகவே மீண்டும் மீண்டும் விளையாட வேண்டிய சூழல் உண்டாகும். பிற அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைப் பெறாது. இதன் விளைவாக, இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாடுவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

ALSO READ: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 16 டெஸ்ட் தொடர்.. யார் அதிக ஆதிக்கம்..?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் அணிகள்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தற்போது விளையாடும் 9 அணிகள் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகும் . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடங்கியது, முதல் இறுதிப் போட்டி 2019 இல் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது பதிப்பை ஆஸ்திரேலியாவும், 3வது பதிப்பை தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. 2 முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முன்னேறியும் இந்திய அணியாக் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.