IND W vs PAK W: மீண்டும் கிளம்பிய சர்ச்சை! பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்.. இணையத்தில் விவாதம்!

ICC Women's World Cup 2025: இலங்கைக்கு எதிரான அபார வெற்றியுடன் 2025 மகளிர் உலகக் கோப்பையை தொடங்கிய இந்திய மகளிர் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிப் பயணத்தைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸின் போது, ​​அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் பாத்திமா சனாவுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார்.

IND W vs PAK W: மீண்டும் கிளம்பிய சர்ச்சை! பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்.. இணையத்தில் விவாதம்!

இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா

Published: 

05 Oct 2025 17:24 PM

 IST

2025 ஆசியக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் அணியை 3 முறை எதிர்கொண்டது. இந்த 3 முறையும் இந்திய அணியின் கேப்டனோ அல்லது இந்திய வீரர்களோ பாகிஸ்தான் அணியின் வீரர்களுடன் கைகுலுக்கி கொள்ளவில்லை. தொடர்ந்து, இந்திய அணி (Indian Cricket Team) பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கோப்பை 2025 ஐ வென்றது. அப்போதும், பாகிஸ்தான் அமைச்சரும், ஏசிசி தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்தது. இப்போது இந்திய மகளிர் அணியும் இந்த முறை இதேபோன்ற செயலை செய்துள்ளது. கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் ஆறாவது போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை தோற்கடிக்க இந்திய அணி தீவிரமாக களமிறங்கியுள்ளது. முன்னதாக, டாஸின் போது இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுடன் கைகுலுக்க மறுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: கேப்டன் பதவி போதும்! நீக்கப்பட்ட ரோஹித் சர்மா.. காரணம் என்ன?

கட்டாய வெற்றியில் பாகிஸ்தான் அணி:


இலங்கைக்கு எதிரான அபார வெற்றியுடன் 2025 மகளிர் உலகக் கோப்பையை தொடங்கிய இந்திய மகளிர் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிப் பயணத்தைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸின் போது, ​​அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் பாத்திமா சனாவுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். இது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. கடந்த 2025 ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மகளிர் அணி இப்படியான செயலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.  பாகிஸ்தான் டாஸில் வென்று முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது.

இந்திய ஆண்கள் அணியும் எதிர்ப்பு:

முன்னதாக, 2025 ஆசிய கோப்பையின் போது, ​​இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுடன் கைகுலுக்க மறுத்தது கணிசமான சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்துவிட்டது. பின்னர் நக்வி கோப்பையை தன்னுடன் எடுத்துச் சென்றார். இந்த சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையிலும் இந்திய மகளிர் அணியின் கேப்டன், பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார்.

ALSO READ: அவரை மிஸ் செய்யாமல் எப்படி..? அஸ்வின் குறித்து ஜடேஜா உணர்ச்சிவசம்..!

இந்திய அணி ஆதிக்கம்:

இந்திய மகளிர் அணி இதுவரை பாகிஸ்தான் மகளிர் அணியை ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் கூட தோற்கடிக்கவில்லை. இரு அணிகளும் இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்திய மகளிர் அணி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இரு அணிகளும் ஒருநாள் உலகக் கோப்பையில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளன. அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போது, ​​இந்தப் போட்டியிலும் வெற்றி பெறுவதன் மூலம் தனது தோல்வியற்ற தொடரைத் தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

ஸ்மிருதி மந்தானா மற்றும் பலாஷின் திருமணம் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சை
தெருவில் விடப்பட்ட பிறந்த குழந்தை.... இரவு முழுவதும் பாதுகாத்த தெரு நாய்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
மூளை கீழே விழும் விநோத நோய் - 14 ஆண்டுகளாக போராடும் ஆசிரியர்
சதமடித்த கோலி.. மனைவி அனுஷ்கா சர்மாவின் பதிவு..