IND-W vs PAK-W: தடையாக வரும் மழை.. உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..?
IND W vs PAK W World Cup Pitch Report, Weather: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த 2025 செப்டம்பர் கடைசி வாரம் வடகிழக்கு பருவமழை கொழும்புவை கடுமையாக தாக்கியது. மேலும், நேற்று அதாவது 2025 அக்டோபர் 4ம் தேதி இலங்கை - ஆஸ்திரேலியா போட்டியும் மழையால் பாதித்தது.

2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை (Women’s Cricket World Cup) 6வது போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் (IND-W vs PAK-W) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச கிரிக்கெட் ஸ்டேடியத்தில்பிற்பகல் 3.30 மணிக்கு மோதுகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய பிறகு தனது வெற்றி பயணத்தை தொடர முயற்சிக்கும். அதேநேரத்தில், பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி என்பதால் மழை காரணமாக போட்டி தடைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வானிலை முன்னறிவிப்பை பற்றி தெரிந்து கொள்வோம்.
வானிலை முன்னறிப்பு:
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த 2025 செப்டம்பர் கடைசி வாரம் வடகிழக்கு பருவமழை கொழும்புவை கடுமையாக தாக்கியது. மேலும், நேற்று அதாவது 2025 அக்டோபர் 4ம் தேதி இலங்கை – ஆஸ்திரேலியா போட்டியும் மழையால் பாதித்தது. இந்த போட்டியில் டாஸ் கூட போட முடியவில்லை. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டியையும் மழை பாதிக்கலாம்.
ALSO READ: இந்திய மகளிர் அணியும் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைக்குலுக்காது.. தடை போட்ட பிசிசிஐ..?




கொழும்பில் வானிலை எப்படி..?
கொழும்பில் டாஸ் போடப்படும் மதியம் 2.30 மணிக்கு மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு 27 சதவீத மழையும், மாலை 4.30 மணிக்கு 64 சதவீத மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மழை பெய்ய வாய்ப்புகள் குறைவானதாகவே உள்ளது. இரவு 9.30 மணிக்கு 53 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதேநேரத்தில், வங்கதேசம் பாகிஸ்தானை வெறும் 129 ரன்களுக்குள் சுருட்டியது. அதேபோல், இந்தியா – பாகிஸ்தான் போட்டியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம். மழையால் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கும். இது வேகப்பந்து வீச்சாளருக்கு பலமாக மாறும். அதேநேரத்தில், பெண்கள் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் 11 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
ALSO READ: பாகிஸ்தானை தோற்கடிக்குமா இந்திய மகளிர் படை.. எப்போது, எங்கே, எப்படி இந்தப் போட்டியைப் பார்ப்பது?
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
இந்தியா:
பிரத்திகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, அமஞ்சோத் கவுர், ஸ்னே ராணா, ரே க்ரந்தி கௌர்.
பாகிஸ்தான்:
மனிபா அலி, ஒமைமா சோஹைல், சித்ரா அமின், அலியா ரியாஸ், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நடாலியா பெர்வைஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், நஷ்ரா சந்து, டயானா பெய்க், சாடியா இக்பால்