Asia Cup 2025: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது? யாருடன்..? முழு விவரம் இங்கே!
Indian Cricket Team Next Match: இந்திய அணியின் அடுத்த போட்டி ஓமனுக்கு எதிராக விளையாருகிறது. இந்த போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 19ம் தேதி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும். 2025 ஆசிய கோப்பையில் இந்தியா இதுவரை 2 போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாடியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி
2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) போட்டி தொடங்குவதற்கு முன்பே, இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வெல்லும் என பலரும் கருத்து தெரிவித்தனர்ல். சர்வதேச டி20யில் உலகின் நம்பர்-1 அணியாக உள்ள இந்திய அணி (Indian Cricket Team) 2025 ஆசிய கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தொடர்ந்து, கடந்த 2025 செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த 2 வெற்றிகளுக்குப் பிறகு இந்திய அணி 4 புள்ளிகளை பெற்று குரூப் ஏ பிரிவில் உள்ளது மட்டுமல்லாமல், சூப்பர்-4க்கு தகுதி பெற்றுள்ளது. இந்தநிலையில், 2025 ஆசிய கோப்பையில் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி அடுத்த போட்டியில் யாரை, எப்போது எதிர்கொள்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் அடுத்த போட்டி எப்போது, யாருடன்?
இந்திய அணியின் அடுத்த போட்டி ஓமனுக்கு எதிராக விளையாருகிறது. இந்த போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 19ம் தேதி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும். 2025 ஆசிய கோப்பையில் இந்தியா இதுவரை 2 போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாடியுள்ளது. இந்தநிலையில், அபுதாபி ஸ்டேடியம் இந்திய அணிக்கு ஒரு புதிய சவாலாக இருக்கலாம். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடர்ந்து குரூப் ஏ பிரிவில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்கும்.
ALSO READ: இந்திய அணியின் புதிய ஸ்பான்சராக அப்போல்லோ டயர்ஸ்.. ஒரு போட்டிக்கு இவ்வளவு பணம் வழங்குமா..?
இந்திய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா..?
இந்தியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான இந்த குரூப் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 19ம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஓமன் வெற்றி பெற்றாலும், எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் ஓமன் அணியில் இப்போது சூப்பர்-4 க்கு செல்வது சாத்தியமற்றது.
ALSO READ: 1993 முதல் 2025 வரை.. இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் யார்..? முழு லிஸ்ட்!
இதுவரை 2 அணிகள் வெளியேற்றம்:
2025 ஆசிய கோப்பையில் மொத்தம் எட்டு அணிகள் விளையாடுகின்றன, அவற்றில் இந்தியா மட்டுமே இதுவரை சூப்பர்-4க்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம், ஹாங்காங் மற்றும் ஓமன் அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன. அதாவது, சூப்பர்-4க்கான போட்டி இரு குழுக்களிலும் உள்ள 5 அணிகளுக்கு இடையே இன்னும் நடந்து வருகிறது. இந்த ஐந்து அணிகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளில் 3 அணிகள் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற முடியும்.