ஒரே ஓவரில் 26 ரன்கள்.. விசித்திரமான நோ-பால்.. ரசிகர்களைக் கடுப்பேற்றிய துபே!

IND vs ZIM T20 WC: இந்தத் தோல்வியால் ஜிம்பாப்வே தொடரிலிருந்து வெளியேறியது; அதேசமயம் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெறுவதை இந்த முடிவு உறுதி செய்தது. தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த 76 ரன்கள் தோல்விக்குப் பிறகு, இந்த வெற்றி இந்தியாவின் அரையிறுதிப் பயணத்தை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வந்துள்ளது.

ஒரே ஓவரில் 26 ரன்கள்.. விசித்திரமான நோ-பால்.. ரசிகர்களைக் கடுப்பேற்றிய துபே!

ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே பந்துவீச முயன்ற துபே.

Updated On: 

27 Feb 2026 14:28 PM

 IST

ஜிம்பாப்வே அணிக்கு  (India vs Zimbabwe) எதிரான நேற்றைய டி20 உலகக்கோப்பையின் (T20 World Cup 2026) ‘சூப்பர் 8’ போட்டியின் போது, இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் சிவம் துபே வீசிய ஒரு விசித்திரமான ‘நோ-பால்’ சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. ஜிம்பாப்வே இன்னிங்ஸின் 15-வது ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது. விறுவிறுப்பாக போட்டி நடந்து கொண்டிருந்த சமயம், துபேயின் இந்த மோசமான பந்தவீச்சு ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. அவ்வாறு தனது முதல் ஓவரில் மட்டும் அவர் மீண்டும் மீண்டும் 3 வைட் பால்களை வீசி ஒரே ஓவரில் 26 ரன்களை வாரி வழங்கினார்.

இதையும் படிக்க : IND vs ZIM: தென்னாப்பிரிக்கா ஜெயிக்கணும்.. இந்திய அணிக்காக வேண்டும் ரசிகர்கள்.. அரையிறுதி போர் சொல்வது என்ன?

ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே வீச முயற்சி:

ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் பிரையன் பென்னட்டிற்கு எதிராக, ‘வைடு ஆஃப்-ஸ்டம்ப்’ (Wide outside off-stump) பகுதியில் பந்துவீசும் உத்தியை துபே கையாண்டார். பென்னட் அவரது பந்துகளைச் சிதறடித்ததால், கடும் அழுத்தத்திற்கு ஆளான துபே தொடர்ந்து ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே வீச முயன்றார்; இதன் விளைவாக மூன்று வைடு பந்துகள் வீசப்பட்டன. ஆனால், அடுத்த பந்தை அவர் மிகவும் வெளியே வீசியதால், அது ஆடுகளத்திற்கு (Pitch) வெளியிலேயே விழுந்து எகிறியது. ஆடுகளத்தின் எல்லைக்கு வெளியே பந்து விழுந்ததால், நடுவர் உடனடியாக அதை ‘நோ-பால்’ என அறிவித்தார். ஒரு பந்து முறைப்படி வீசப்பட வேண்டுமானால், அது ஆடுகளத்தின் எல்லைக்குள் விழுந்திருக்க வேண்டும்.

விதிமுறை கூறுவது என்ன?

எம்.சி.சி (MCC) கிரிக்கெட் விதி 21.7-ன் படி, ஒரு பந்து பேட்ஸ்மேனைச் சென்றடைவதற்கு முன்பாக ஆடுகளத்தின் பரப்பிற்கு வெளியே (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ) விழுந்தால், அதை நடுவர் நோ-பால் என அறிவிக்க வேண்டும்.

போட்டியின் சுருக்கம்:

சிவம் துபேயின் இந்தச் செயலால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தாலும், ஒட்டுமொத்தப் போட்டியில் இந்தியா அபாரமாகச் செயல்பட்டது. அபிஷேக் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி அரைசதங்கள் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் (3-24) துல்லியமான பந்துவீச்சால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

இதையும் படிக்க: T20 World Cup 2026 : ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

அரையிறுதி வாய்ப்பு:

இந்தத் தோல்வியால் ஜிம்பாப்வே தொடரிலிருந்து வெளியேறியது; அதேசமயம் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெறுவதை இந்த முடிவு உறுதி செய்தது. தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த 76 ரன்கள் தோல்விக்குப் பிறகு, இந்த வெற்றி இந்தியாவின் அரையிறுதிப் பயணத்தை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வந்துள்ளது. எனினும், மார்ச் 1 அன்று கொல்கத்தாவில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கவுள்ள போட்டி, இந்தியாவிற்கு வாழ்வா-சாவா போட்டியாக அமையும்.

Follow Us
வெளியான விக்ரமின் சீயான் 63 பட ஷூட்டிங் அப்டேட் !
கிளீன் ஷேவ் லுக்கில் மிரட்டும் யாஷ் - வைரலாகும் டாக்ஸிக் பட புதிய போஸ்டர்
மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!
ஜூன் மாதம் வெளியாகும் விஜய்யின் ஜனநாயகன்?