T20 World Cup 2026: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தோல்வி.. சூப்பர் 8க்கு செல்லுமா இங்கிலாந்து..? புள்ளிகள் அட்டவணை இதோ!
T20 World Cup 2026 Points Table: 2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்து முதல் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8க்கு முன்னேறும். இது கிட்டதட்ட காலிறுதி போட்டியை போன்றது. இங்கிலாந்து குரூப் சியில் இடம் பிடித்துள்ளது. குரூப் சி புள்ளிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து
2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 WorldCup) புள்ளிகள் அட்டவணை தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. நேற்று அதாவது 2026 பிப்ரவரி 11ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு, இங்கிலாந்து அணி பின்னடைவை சந்திந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணி வெற்றி பெற்றதன் காரணமாக, சூப்பர் 8 பந்தயத்தில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் வாய்ப்பை தவறவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா இங்கிலாந்து..?
2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்து முதல் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8க்கு முன்னேறும். இது கிட்டதட்ட காலிறுதி போட்டியை போன்றது. இங்கிலாந்து குரூப் சியில் இடம் பிடித்துள்ளது. குரூப் சி புள்ளிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ஸ்காட்லாந்து 2 போட்டிகளில் 1 வெற்றியுடன் +0.950 என்ற நிகர ரன் ரேட்டுடன் 2வது இடத்தில் உள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் 3வது இடத்தில் உள்ளதால் சூப்பர் 8க்கான பந்தயத்திலும் பின்தங்கியுள்ளனர். இருப்பினும், சிறந்த ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்தை விட ஸ்காட்லாந்து முன்னிலை வகிக்கிறது. இந்த குழுவில் நேபாளம் மற்றும் இத்தாலி அணிகள் முறை 4 மற்றும் 5 இடத்தில் உள்ளன.
குரூப் ஏவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் இதுவரை ஒரு போட்டியில் விளையாடி 1 வெற்றியுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த குரூப் பிரிவில் பாகிஸ்தான் 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.
ALSO READ: மழையால் இந்தியா vs நமீபியா மோதும் போட்டி பாதிக்கப்படுமா? டெல்லியில் வானிலை எப்படி?
குரூப் ஏ புள்ளிகள் அட்டவணை:
குரூப் பி புள்ளிகள் அட்டவணை:
குரூப் சி புள்ளிகள் அட்டவணை:
குரூப் டி புள்ளிகள் அட்டவணை:
2026 டி20 உலகக் கோப்பையில் போட்டி 15க்குப் பிறகு அதிக ரன்கள் எடுத்த முதல் 5 வீரர்கள்:
- டிம் சீஃபர்ட் (நியூசிலாந்து) – 154 ரன்கள்
- சாஹிப்சாதா ஃபர்ஹான் (பாகிஸ்தான்) – 120 ரன்கள்
- ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) – 111 ரன்கள்
- ஜார்ஜ் முன்சி (ஸ்காட்லாந்து) – 103 ரன்கள்
- ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (வெஸ்ட் இண்டீஸ்) மற்றும் பாஸ் டி லீட் (நெதர்லாந்து) – 102 ரன்கள்
ALSO READ: டி20 உலகக் கோப்பையில் 9வது முறை மோதும் IND – PAK.. யார் அதிக முறை வெற்றிபெற்று ஆதிக்கம்?
2026 டி20 உலகக் கோப்பையில் போட்டி 15க்குப் பிறகு அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் 5 வீரர்கள்:
- ஷாட்லி வான் ஷால்க்விக் (அமெரிக்கா) – 8 விக்கெட்
- லுங்கி என்கிடி (தென்னாப்பிரிக்கா) – 7 விக்கெட்
- ரொமாரியோ ஷெப்பர்ட் (வெஸ்ட் இண்டீஸ்) – 6 விக்கெட்
- மைக்கேல் லீஸ்க் (ஸ்காட்லாந்து) – 5 விக்கெட்
- நாதன் எல்லிஸ் (ஆஸ்திரேலியா) – 4 விக்கெட்