AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs NAM: மழையால் இந்தியா vs நமீபியா மோதும் போட்டி பாதிக்கப்படுமா? டெல்லியில் வானிலை எப்படி?

India vs Namibia: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 18வது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் என்பதால், அதிக ஸ்கோரிங் போட்டியாக அமைக்கலாம். இந்த ஸ்டேடியத்தில் இதுவரை மொத்தம் 14 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன.

IND vs NAM: மழையால் இந்தியா vs நமீபியா மோதும் போட்டி பாதிக்கப்படுமா? டெல்லியில் வானிலை எப்படி?
இந்தியா - நமீபியா Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Feb 2026 07:21 AM IST

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) 18வது போட்டியில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 12ம் தேதி இந்தியா மற்றும் நமீபியா (India vs Namibia) அணிகளுக்கு இடையே டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்கும். மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா முன்பு விளையாடி 2 புள்ளிகளை பெற்றது. நமீபிய அணி தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில்லை அல்லது இந்திய அணியை தோற்கடிக்கும் அளவுக்கு வலுவான அணியாகவும் இல்லை. இருப்பினும், டி20 உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் எந்த அணிகளையும் எளிதாக எடுத்துகொள்வது ஆபத்தானது. இந்தநிலையில், இந்தியா – நமீபியா அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட் உள்ளிட்ட போட்டி விவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் 9வது முறை மோதும் IND – PAK.. யார் அதிக முறை வெற்றிபெற்று ஆதிக்கம்?

ஹெட் டூ ஹெட்:

2021 உலகக் கோப்பையில் நடைபெற்ற இந்தியா – நமீபியா அணிகளுக்கும் இடையே இதுவரை ஒரே ஒரு டி20 சர்வதேச போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில், இந்திய அணி 133 ரன்கள் என்ற இலக்கை வெறும் 15.2 ஓவர்களில் அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச்:

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 18வது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் என்பதால், அதிக ஸ்கோரிங் போட்டியாக அமைக்கலாம். இந்த ஸ்டேடியத்தில் இதுவரை மொத்தம் 14 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 5 போட்டிகளில் வெற்றிகளையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்குள்ள டி20 போட்டிகளில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 145 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் வானிலை எப்படி..?

இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் போட்டியின் போது வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும். இரவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதேநேரத்தில், வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறையும் என்பதால் களத்தில் குளிர்ச்சி நிலவும். தொடர்ந்து, மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்பதால், இரு அணிகளுக்கும் இடையே 40 ஓவர் போட்டி முழுமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

ALSO READ: ஒரே போட்டியில் அடுத்தடுத்து சூப்பர் ஓவர்.. ஆப்கானிஸ்தானை போராடி வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

இந்திய அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

நமீபியா அணி:

லாரன் ஸ்டீன்காம்ப், ஜான் ஃப்ரீலிங்க், நிக்கோல் லோஃப்டி-ஈடன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜேஜே ஸ்மிட், ஜேன் கிரீன் (விக்கெட் கீப்பர்), டிலான் லீக்டர், ரூபன் டிரம்பெல்மேன், வில்லெம் மைபர்க், பெர்னார்ட் ஷால்ட்ஸ், மேக்ஸ் ஹெங்கோ

இந்தியா – நமீபியா போட்டியை எங்கு காணலாம்?

இந்தியா மற்றும் நமீபியா இடையிலான 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியை டிவியில் காண விரும்புவோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் காணலாம். ஓடிடியில் காண விரும்புவோர் ஜியோஹாட்ஸ்டாரில் லைவில் காணலாம்.

Follow Us