India vs Pakistan: இந்திய அணி வெற்றியுடன் சூப்பர் 8க்கு முன்னேற்றம்.. பாகிஸ்தான் அணி சறுக்கியது எப்படி?

2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்று இந்திய அணி சூப்பர் 8 சுற்றையும் உறுதி செய்தது.

India vs Pakistan: இந்திய அணி வெற்றியுடன் சூப்பர் 8க்கு முன்னேற்றம்.. பாகிஸ்தான் அணி சறுக்கியது எப்படி?

இந்திய கிரிக்கெட் அணி

Updated On: 

15 Feb 2026 22:44 PM

 IST

கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் (India vs Pakistan) இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 175 ரன்கள் எடுத்தது. ஆனால், 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானால் 114 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், 2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்று இந்திய அணி சூப்பர் 8 சுற்றையும் உறுதி செய்தது. 2026 டி20 உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியை சந்திக்காத பாகிஸ்தானுக்கு முதல் தோல்வியையும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பரிசளித்தது. இந்த தோல்வி பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதை தாமதப்படுத்தலாம். அப்படி இல்லையெனில், தடையாக அமையலாம்.

ALSO READ: பாகிஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு.. இந்திய பேட்டிங்கில் நடந்த முக்கிய விஷயங்கள்!

பாகிஸ்தான் அணிக்கு சறுக்கியது எப்படி..?

  • 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர் உஸ்மானை தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனும் 40 ரன்களை கடக்கவில்லை. உஸ்மான் கான் மட்டுமே பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்திருந்தார்.
  • இதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகிய நிலையில், 4 வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர். இது பாகிஸ்தான் அணிக்கு பேரடியாக அமைந்தது.
  • இந்தியாவின் இறுக்கமான பந்துவீச்சை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் தாங்க முடியவில்லை. முதல் ஓவரிலேயே ஹர்திக் பாண்ட்யாவால் சாஹிப்சாதா ஃபர்ஹானை ஆட்டமிழக்க செய்தார். அதன் பிறகு, அடுத்த ஓவரிலேயே, ஜஸ்பிரித் பும்ரா பாகிஸ்தான் அணியின் சாம் அயூப் மற்றும் சல்மான் அகாவை அவுட்டாக்கி பும்ரா பாகிஸ்தான் பேட்டிங் முதுகெலும்பை நொறுக்கினார்.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் ரன் மெஷின்.. பாகிஸ்தானுக்கு எதிராக 27 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன்!

  • 176 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு அதிக எண்ணிக்கையிலான பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் தேவையாக இருந்தது. இருப்பினும், இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி மொத்தமாகவே வெறும் 3 சிக்ஸர்களையும், 12 பவுண்டரிகளையே பதிவு செய்திருந்தனர். அதேநேரத்தில், இந்திய அணி பேட்டிங் செய்திருந்தபோது தனது இன்னிங்ஸில் 6 சிக்ஸர்களையும், 19 பவுண்டரிகளை ஓடவிட்டிருந்தது.
  • டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்துவது இது எட்டாவது முறையாகும்.
  • இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி, பும்ரா மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், திலக் வர்மா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்