Asia Cup 2025: சரித் அசலங்கா தலைமை.. அனுபவ ஆல்ரவுண்டருக்கு இடம்.. ஆசியக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Sri Lanka Cricket Team: இலங்கை கிரிக்கெட் அணி 2025 ஆசிய கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது. சரித் அசலங்கா தலைமையிலான 17 வீரர்கள் கொண்ட அணியில் குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணி ஆசிய கோப்பைக்கு முன்னர் ஜிம்பாப்வேயில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் ஆசிய கோப்பைக்கு (2025 Asia Cup) முன்பு, இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் (Sri Lanka Cricket) நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 29ம் தேதி அறிவித்தது. சரித் அசலங்காவின் தலைமையில் 17 பேர் கொண்ட அணியில் குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், மகேஷ் தீக்ஷனா, மதிஷா பதிரனா ஆகியோர் அடங்குவர். இது ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டது.
ஆசிய கோப்பையின் குரூப் பி-யில் இலங்கை கிரிக்கெட் அணி சேர்க்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இந்த குழுவில் உள்ளன. ஆசிய கோப்பைக்கு முன், இலங்கை அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். இதற்கு முன், இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 28ம் தேதி முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும். அதன் பிறகு முதல் டி20 போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 3ம் தேதி முதல் நடைபெறுகிறது.




ஜிம்பாப்வே vs இலங்கை டி20 தொடர் அட்டவணை
ஜிம்பாப்வே vs இலங்கை முதல் டி20 போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 3 புதன்கிழமை, இரண்டாவது டி20 வருகின்ற 2025 செப்டம்பர் 6 சனிக்கிழமை மற்றும் மூன்றாவது டி20 வருகின்ற 2025 செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குத் தொடங்கும். மூன்று டி20 போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
ஆசிய கோப்பைக்கான இலங்கையின் அட்டவணை:
2025 கிரிக்கெட் ஆசிய கோப்பையின் முதல் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங்கிற்கு இடையே நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே நடைபெறும். இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 13 ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெறும். குழு நிலையில் இலங்கையின் போட்டிகளின் அட்டவணையைப் பாருங்கள்.
- 2025 செப்டம்பர் 13: இலங்கை vs வங்கதேசம் (ஷேக் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்) – மாலை 7:30 IST
- 2025 செப்டம்பர் 15: இலங்கை vs ஹாங்காங் (துபாய் சர்வதேச மைதானம்) – இரவு 7:30 IST
- 2025 செப்டம்பர் 18: இலங்கை vs ஆப்கானிஸ்தான் (ஷேக் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியம்) – மாலை 7:30 IST
ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி:
Sri Lanka T20I Squad announced for the Asia Cup 2025📷
The Sri Lanka Cricket Selection Panel has named the following squad for the ACC Men’s T20 Asia Cup 2025.
The Squad : https://t.co/lUPAblnZhJ#SriLankaCricket #AsiaCup2025 pic.twitter.com/f5AcHDovgg— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) August 28, 2025
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷார, தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெலலகே, சமிக கருணாரத்னே, சமிக கருணாரத்னே, டி. பெர்னாண்டோ, நுவான் துஷார, மதிஷ பதிரனா