India vs Pakistan 2026: மழையால் தடையா..? இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளில் மோசமான வானிலை.. வெதர் அப்டேட் இதோ!
India vs Pakistan Match Weather Update: தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் 2026 பிப்ரவரி 15ம் தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக இலங்கை வானிலை ஆய்வு மையம் சிறப்பு வானிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான்
2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) ரசிகர்கள் அனைவரும் 2026 பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குரூப் ஏ போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டி20 உலகக் கோப்பையில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி (Indian Cricket Team), இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையில், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் மிகக் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு அமெரிக்காவுக்கு எதிராகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் சூப்பர் 8க்கு தகுதி பெறும். இந்தப் போட்டிக்கு முன்னதாக, 2026 பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் வானிலை எப்படி இருக்கும் என்று இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ALSO READ: நெருப்பாக வரும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. மிரட்டப்போக்கும் 8 முக்கிய வீரர்கள்!
போட்டி நாளில் கனமழைக்கு வாய்ப்பா..?
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் 2026 பிப்ரவரி 15ம் தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் சிறப்பு வானிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று அதாவது பிப்ரவரி 13ம் தேதி காலை 10:30 மணிக்கு இயற்கை ஆபத்துகள் குறித்த முன்னறிவிப்பு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் மழை பெய்ய 93 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பாளரான AccuWeather கணித்துள்ளது.
போட்டி நடைபெறுமா..?
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது கொழும்பில் வானிலை குறித்து, அக்யூவெதர் கூறுகையில், அந்த நேரத்தில் மழை பெய்ய 9 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருக்கும். இருப்பினும், மாலை 6 மணிக்குள் வாய்ப்பு 49 சதவீதமாக அதிகரிக்கும், எனவே டாஸ் நிச்சயமாக தாமதமாகும். இருப்பினும், இந்த நேரத்திற்குப் பிறகு மேகங்கள் கூடி மழை பெய்யும் அபாயம் குறையும் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் வெப்பநிலையானது 28 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம்.
இந்தியா vs பாகிஸ்தான் நேருக்கு நேர் சாதனை
இந்தியாவும் பாகிஸ்தானும் டி20 சர்வதேச போட்டிகளில் 16 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 13 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வென்றுள்ளது.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எந்த தேதியில் நடைபெறும்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை அதாவது 2026 பிப்ரவரி 15 இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இது 2026 டி20 உலகக் கோப்பையின் 27வது போட்டியாகும்.