Najmul Hossain Shanto: ஒரே டெஸ்டில் அடுத்தடுத்து 2 சதங்கள்.. இலங்கைக்கு எதிராக வரலாறு படைத்த வங்கதேச கேப்டன் சாண்டோ!
Sri Lanka vs Bangladesh 1st Test: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இரண்டு சதங்கள் அடித்து வரலாறு படைத்தார். முதல் இன்னிங்ஸில் 148, இரண்டாவது இன்னிங்ஸில் 125 ரன்கள் எடுத்தார். இதனால் வங்கதேசம் 285 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இலங்கைக்கு 296 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 5வது நாள் ஆட்டத்தின் இறுதியில் டிராவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் (Sri Lanka vs Bangladesh 1st Test) 5வது நாளில் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ (Najmul Hossain Shanto) ஒரு அற்புதமான சதத்தை அடித்து வரலாற்று சாதனை படைத்தார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 148 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து, 2வது இன்னிங்ஸிலும் 2வது சதத்தை பதிவு செய்தார். ஒரு டெஸ்ட் போட்டியில் சாண்டோ 2 சதங்கள் அடிப்பது இது 2வது முறையாகும். முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு மிர்பூர் டெஸ்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 146 ரன்களும், 124 ரன்களும் எடுத்திருந்தார். வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
இதையடுத்து, இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இலங்கை 296 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த டெஸ்ட் போட்டியில் இன்னும் சிறிது நேரமே இல்லை, 5வது நாள் ஆட்டம் முடிவடைய இன்னும் சில ஓவர்கள் மட்டுமே உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்கிறது.
வரலாறு படைத்த சாண்டோ:
காலி ஸ்டேடியத்தில் இலங்கை – வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹசன் சாண்டோ சதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில், அவர் 279 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 148 ரன்கள் எடுத்தார். இது தவிர, முஷ்பிகுர் ரஹீமும் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 495 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக, முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 485 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில், பதும் நிஸாங்கா 187 ரன்கள் குவித்தார். அதேநேரத்தில், சண்டிமால் 54 ரன்களும், கமிந்து மெண்டீஸ் 87 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட்டுகளுக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில், இரண்டாவது இன்னிங்ஸில், சாண்டோ அற்புதமாக பேட்டிங் செய்து 199 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் எடுத்தார். இலங்கை இப்போது வெற்றி பெற 296 ரன்கள் எடுக்க வேண்டும், ஆனால் இன்னும் சில ஓவர்கள் மட்டுமே உள்ளன.
சாண்டோவின் 7வது டெஸ்ட் சதம்:
🚨 NAJMUL HOSSAIN SHANTO BECOMES THE FIRST BANGLADESH CAPTAIN TO SCORE 2 HUNDREDS IN A TEST MATCH 🚨 pic.twitter.com/gTy0TsAsix
— Johns. (@CricCrazyJohns) June 21, 2025
வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹசன் சாண்டோவிற்கு இது 7வது டெஸ்ட் சதமாகும். தனது 36வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சாண்டோ 32.74 சராசரியுடன் 7 சதம், 6 அரைசதங்களுடன் 2,162 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சாண்டோவின் அதிகபட்ச ஸ்கோர் 163 ரன்கள் ஆகும். இலங்கைக்கு எதிரான 7 டெஸ்ட் போட்டிகளில் 42.08 சராசரியுடன் 505 ரன்கள் எடுத்துள்ளார். இலங்கை மண்ணில் 6 இன்னிங்ஸ்களில் இது அவரது 3வது சதமாகும்.