Shubman Gill: இங்கிலாந்தில் இந்திய கேப்டனாக அதிக ஸ்கோர்.. மலைபோல் சாதனையை குவிக்கும் சுப்மன் கில்!
Shubman Gill's Historic 180 Score: சுப்மன் கில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 180 ரன்களை கடந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 150 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையையும், ஜேம்ஸ்-ஆண்டர்சன் டிராபியில் 300 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

சுப்மன் கில்
பர்மிங்காம் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் (Ind vs Eng 2nd Test) இந்திய கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) 150 ரன்கள் மேல் குவித்து வரலாறு படைத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 150 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். இந்த அற்புதமான சதத்தின் அடிப்படையில், ஜேம்ஸ்-ஆண்டர்சன் டிராபியில் (Anderson–Tendulkar Trophy) 300 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் சுப்மன் கில் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, சுப்மன் கில் 150 ரன்களுக்கு மேல் எடுத்து விளையாடி வருகிறார்.
2வது இந்திய கேப்டன்:
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முகமது அசாருதீனுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸில் 150 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை சுப்மான் கில் படைத்தார். முன்னதாக இந்த சாதனையை முகமது அசாருதீன், கடந்த 1990ம் ஆண்டு இந்த சாதனையை படைத்தார். கடந்த 1932ம் ஆண்டு இந்திய அணி தனது முதல் டெஸ்டில் விளையாடியது. அதன்படி, கடந்த 93 ஆண்டுகளில், இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக கேப்டனாக 2 இந்திய கேப்டன்கள் மட்டுமே 150 ரன்களைக் கடந்துள்ளனர். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் 1,000 ரன்களை எட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் ஒரு இந்திய கேப்டன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர்:
SHUBMAN GILL HAS THE HIGHEST INDIVIDUAL SCORE AS AN INDIAN TEST CAPTAIN IN ENGLAND. 🇮🇳 pic.twitter.com/vaXDgf1NBj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 3, 2025
இந்திய கேப்டனாக இங்கிலாந்து மண்ணில் அதிக தனிநபர் ஸ்கோரை அடித்த வீரர் என்ற சாதனையை முகமது அசாருதீன் படைத்திருந்தார். தற்போது, இந்த சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார். முன்னதாக, கடந்த 1990ம் ஆண்டு இங்கிலாந்தில் முகமது அசாருதீன் 179 ரன்கள் எடுத்தார். தற்போது, பர்மிங்காமில் சுப்மன் கில் 180 ரன்கள் கடந்து விளையாடி வருகிறார். மேலும் இங்கிலாந்து மண்ணில் அதிக தனிநபர் ஸ்கோரை அடித்த இந்திய கேப்டன்களின் பட்டியலில் சுப்மன் கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முகமது அசாருதீன் 179 ரன்களுடன் 2வது இடத்திலும், கடந்த 2018ம் ஆண்டு விராட் கோலி 149 ரன்கள் எடுத்து 3வது இடத்திலும், கடந்த 1967ம் ஆண்டு 148 ரன்கள் எடுத்த மன்சூர் அலி கான் பட்டோடி இந்தப் பட்டியலில் நான்காவது இடத்திலும் உள்ளனர்.