Shubman Gill Century: இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 3வது சதம்.. குவிந்த பல்வேறு ரெக்கார்ட்ஸ்.. கலக்கிய சுப்மன் கில்..!
India vs England Test: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், கேப்டன் சுப்மன் கில் அசத்தலான சதம் அடித்துள்ளார். இது இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த மூன்றாவது தொடர்ச்சியான சதம். இந்தியா 310 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 25 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சுப்மன் கில்
கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, சுப்மன் கில் (Shubman Gill) இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதம் அடித்துள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு எதிராக சுப்மன் கில் தொடர்ந்து அடிக்கும் 3வது சதமாகும். எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டின் (Ind vs Eng 2nd Test) முதல் நாளில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளனர். டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். தொடக்க வீரராக கே.எல். ராகுல் 2 ரன்களில் கிறிஸ் வோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 3வது இடத்தில் களமிறங்கிய கருண் நாயர் (Karun Nair), யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருப்பினும், கருண் நாயர் 31 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். இதன் பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
25 வயதில் 16வது சர்வதேச சதம்:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் சதம் அடித்து ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 16வது சதத்தையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்துள்ளா. அதன்படி, சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் 8 முறையும், டி20 போட்டிகளில் 1 முறையும் சதம் அடித்துள்ளார். 25 வயது வரை அதிக சர்வதேச சதங்களை அடித்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் (40), அதைத் தொடர்ந்து விராட் கோலி (26) உள்ளனர். இந்த பட்டியலில் சுப்மன் கில் 3வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து மூன்றாவது சதம்:
𝐆𝐢𝐥𝐥 𝐫𝐨𝐚𝐫𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐚𝐭 🔥
Captain @ShubmanGill rises to the occasion with a composed century in the 2nd Test vs England 🥶#ENGvIND 👉 2nd TEST, Day 1 | LIVE NOW on JioHotstar ➡ https://t.co/g6BryBp5Tw pic.twitter.com/9nbXztnBD5
— Star Sports (@StarSportsIndia) July 2, 2025
இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்றாவது சதம் அடித்து, சுப்மன் கில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஹெடிங்லி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கில் 147 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்பு தர்மசாலாவில் நடந்த போட்டியில் சுப்மன் கில் 110 ரன்கள் எடுத்திருந்தார். முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 3 போட்டிகளில் முகமது அசாருதீன், திலீப் வெங்சர்க்கார் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
மூன்றாவது இந்திய கேப்டன்:
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக சதம் அடித்த மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். முன்னதாக, விஜய் ஹசாரே (1951-1952 இல் டெல்லி மற்றும் பிராபோர்ன் ஸ்டேடியத்தில்) மற்றும் முகமது அசாருதீன் (1990 இல் லார்ட்ஸ் மற்றும் டிராஃபோர்டில்) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
ரிஷப், நிதிஷ் குமார் ரெட்டி ஏமாற்றம்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு, ரிஷப் பநண்ட் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதன் பிறகு, நிதிஷ் குமார் ரெட்டி உள்ளே வந்த வேகத்தில் வெளியேறினார். அப்போது, இந்திய அணி 211 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதன் பிறகு, சுப்மன் கில்லுடன் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்தார். இருவரும் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.