Ravindra Jadeja: ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வா..? ஹிண்ட் கொடுத்த ரவீந்திர ஜடேஜா!

Ravindra Jadeja Retirement Hint: ரவீந்திர ஜடேஜாவுக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் படேல் நிரந்தர வீரராக எதிர்காலத்தில் பார்க்கப்படலாம். இருப்பினும், இரு வீரர்களும் நீண்ட காலமாக இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். இந்திய அணிக்காக அக்சர் படேல் இதுவரை 71 ஒருநாள் போட்டிகளிலும், வாஷிங்டன் சுந்தர் 29 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

Ravindra Jadeja: ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வா..? ஹிண்ட் கொடுத்த ரவீந்திர ஜடேஜா!

ரவீந்திர ஜடேஜா

Published: 

21 Jan 2026 08:13 AM

 IST

இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளிலும் களமிறங்கி ஜடேஜா பந்துவீசினாலும், ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. மேலும், மூன்று இன்னிங்ஸ்களில் களமிறங்கி ஒரு போட்டியில் கூட 30 ரன்களைத் தாண்டவில்லை. இதனால், ஜடேஜாவின் ஓய்வு குறித்த ஊகங்கள் சமூக வலைதளங்களில் வலம் வர தொடங்கியது. இப்போது, ரவீந்திர ​​ஜடேஜாவே தனது ஓய்வு குறித்து ஒரு முக்கிய குறிப்பை வெளியிட்டுள்ளார்.

ALSO READ: இந்திய ஜெர்சியில் விராட் – ரோஹித் அடுத்து எப்போது களமிறங்குவார்கள்..? யாருடன் மோதும் இந்திய அணி?

ஓய்வு குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜாவே தனது நேரம் வந்துவிட்டதாக கூறினார். 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, ரவீந்திர ஜடேஜா டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, ​​ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். எனவே ஒருநாள் போட்டிகளில் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து ஜடேஜா என்ன சொன்னார் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜடேஜா விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவாரா?


ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. வீடியோவின் போது, ரவீந்திர ​​ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரிடம் நீங்கள் எப்போதாவது படங்களில் நடிப்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த ரிஷப் பண்ட், “நான் இன்னும் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இப்போதைக்கு கிரிக்கெட் விளையாடுவது பற்றிய எண்ணங்களே எனக்கு உள்ளது. ஜடேஜா பாய் பற்றி எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்.

பண்டின் கருத்துக்கு பதிலளித்த ஜடேஜா, ”அப்படியானால், அவர் மறைமுகமாக எனது நேரம் முடிந்துவிட்டது என்று கூறுகிறார்” என்றார். இதைச் சொல்லும்போது ஜடேஜாவின் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

ALSO READ: பொறுமை இழந்த ஐசிசி.. ஸ்காட்லாந்துக்கு அழைப்பு.. வெளியேறும் வங்கதேசம்..? 

ஒருநாள் போட்டிகளில் ஜடேஜாவுக்கு மாற்று வீரர்கள் யார்..?

ரவீந்திர ஜடேஜாவுக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் படேல் நிரந்தர வீரராக எதிர்காலத்தில் பார்க்கப்படலாம். இருப்பினும், இரு வீரர்களும் நீண்ட காலமாக இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். இந்திய அணிக்காக அக்சர் படேல் இதுவரை 71 ஒருநாள் போட்டிகளிலும், வாஷிங்டன் சுந்தர் 29 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

Related Stories
ஈரானில் அதிரடியாக உயர்ந்த சமையல் எண்ணெய்.. கடும் அவதியில் மக்கள்..
புஷ்பானா ஃபயர்! புஷ்பா 2 புரமோஷனுக்காக ஜப்பானில் அல்லு அர்ஜுன்
உரிமையாளரை காப்பாற்ற புலியுடன் போராடி உயிர் தியாகம் செய்த நாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..
3 நாகப் பாம்புகள் உடன் மருத்துவமனைக்கு வந்த நபர்.. பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்..