Asia Cup 2025: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சு சாம்சன்.. ஆசியக் கோப்பையில் விளையாடுவாரா..?

Sanju Samson's Hospitalization: 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்ற சஞ்சு சாம்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நாள் இரவு கேரள கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடினார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்திய அணியில் அவரது இடம் உறுதியானதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Asia Cup 2025: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சு சாம்சன்.. ஆசியக் கோப்பையில் விளையாடுவாரா..?

சஞ்சு சாம்சன்

Published: 

23 Aug 2025 17:06 PM

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கடந்த 2025 ஆகஸ்ட் 19ம் தேதி ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை (Indian Cricket Team) அறிவித்தது. இந்த அணியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) விக்கெட் – கீப்பர் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார். வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2025 ஆசியக் கோப்பை தொடங்கவுள்ளது. இதில் இந்தியா பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இணைந்து குரூப் A பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்கும் நிலையில், துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த போட்டிக்கு முன்னதாக, சஞ்சு சாம்சன் பற்றிய ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு திடீரென்று என்ன ஆயிற்று?


2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது. இந்த நேரத்தில், சாம்சனின் மனைவி சாருலதா ரமேஷ் சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் சஞ்சு சாம்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். போட்டி தொடங்குவதற்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் இந்தப் பதிவு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: கௌதம் கம்பீர் vs கம்ரன் அக்மல்.. ஆசியக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத டாப் 5 சர்ச்சைகள்!

கடந்த 2025 ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சஞ்சு மருத்துவமனையில் இருந்ததாகவும், ஆனால் இது இருந்தபோதிலும், அதே இரவு கேரள கிரிக்கெட் லீக் (KCL) 2025 போட்டியில் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக களமிறங்கியதாகவும் சாருலதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டியில், கொச்சி ப்ளூ டைகர்ஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்து, அதானி திருவனந்தபுரம் ராயல்ஸ் அணியை 20 ஓவர்களில் வெறும் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.

98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ப்ளூ டைகர்ஸ் அணி 49 பந்துகள் மீதமுள்ள நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதில், ப்ளூ டைகர்ஸ் அணிக்காக சைலி விஸ்வநாத் 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். இந்த போட்டியில் சஞ்சு பேட்டிங் செய்ய வரவில்லை என்றாலும், முழுவதுமாக பீல்டிங் செய்தார்.

ALSO READ: ஆசியக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா? மத்திய அமைச்சகம் விளக்கம்!

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா..?

சஞ்சு சாம்சன் சமீப காலமாக டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், கடந்த 2024ம் ஆண்டு 2024-ல் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று சதங்களை அடித்துள்ளார். அவரது ஃபார்மைக் கருத்தில் கொண்டு, ஆசிய கோப்பையில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஷுப்மான் கில் மற்றும் துணை கேப்டன் பதவி மீண்டும் வருவது, சஞ்சுவின் ஆடும் லெவன் அணியில் இடம் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளது. கில் மற்றும் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் களமிறங்கலாம்.