Rohit Sharma’s ODI Future: ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியம்.. ரோஹித் சர்மா போட்ட பக்கா பிளான்!

Australia A Series: இந்திய ஒருநாள் அணித் தலைவர் ரோஹித் சர்மா, 2025 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடி நம்பிக்கையுடன் செல்ல திட்டமிட்டுள்ளார்.

Rohit Sharmas ODI Future: ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியம்.. ரோஹித் சர்மா போட்ட பக்கா பிளான்!

ரோஹித் சர்மா

Published: 

21 Aug 2025 15:46 PM

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வருகின்ற 2025 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு பிறகு, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ரோஹித் சர்மா (Rohit Sharma) தனது கிரிக்கெட் வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள வேறு ஒரு திட்டத்தை தீட்டியுள்ளதாக தெரிகிறது. அதன்படி, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்பு, ரோஹித் சர்மா இந்தியாவில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு (Australia A Series) எதிரான தொடரில் விளையாட விரும்புவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்வார் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா ஏ போட்டியில் பங்கேற்பா..?


ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி முதல் 2025 அக்டோபர் 5ம் தேதி வரை ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் விளையாட ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாக ரெவ்ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா ஏ அணி வருகின்ற 2025 செப்டம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஏ அணிக்கு எதிராக 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். இரண்டு டெஸ்ட் போட்டிகளும் லக்னோவிலும், ஒருநாள் போட்டிகள் கான்பூரிலும் நடைபெறுகிறது.

ALSO READ: தரவரிசையில் காணாமல் போன ரோஹித், கோலி.. திடீரென ஓய்வா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு ரோஹித் சர்மா தனது ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து சிந்திக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. அதன்படி, இந்திய ஒருநாள் அணியில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள ரோஹித் சர்மா எல்லாவற்றையும் முயற்சிக்கிறார் என்று தெரிகிறது. தனது செயல்திறனால் உடற்பகுதி குறித்து தேர்வுக்குழுவுக்கு பதிலளிக்க முடியும் என்பதற்காக, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாட ரோஹித் தயாராகி வருகிறார்.

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு:

ரோஹித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். இந்தநிலையில், இன்னும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ரோஹித் சர்மா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு 20 உலகக் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இதன் பிறகு, இந்த ஆண்டு மே மாதம், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ALSO READ: ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் ? பிசிசிஐயின் மாஸ்டர் பிளான்!

இந்திய ஒருநாள் அணி கேப்டன் ரோஹித் சர்மா கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடினார். நியூசிலாந்துக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா ஒரு அற்புதமான அரைசதம் அடித்தார். ரோஹித் சர்மா எடுத்த 76 ரன்களால் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.