IndvsSA: ரோகித் சர்மா உலக சாதனை…. விராட் கோலி அதிரடி 50… வலுவான நிலையில் இந்தியா

Rohit Sets Record : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். அவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 352 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

IndvsSA: ரோகித் சர்மா உலக சாதனை.... விராட் கோலி அதிரடி 50... வலுவான நிலையில் இந்தியா

விராட் கோலி - ரோகித் சர்மா

Published: 

30 Nov 2025 16:01 PM

 IST

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடரின் முதல் போட்டி நவம்பர் 30, 2025 அன்று ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்கம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதால் ராஞ்சியில் ரன் மழை பொழிகிறது. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மாவும் (Rohit Sharma), விராட் கோலியும் (Virat Kohli) தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை 4 புறமும் சிறடித்தனர். இந்த போட்டியில் ரோகித் சர்மா உலக சாதனை படைத்தார்.

ரோகித் சர்மா உலக சாதனை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 22வது ஓவரில் மார்கோ யான்சன் வீசிய பந்தை  ரோகித் சர்மா சிக்சருக்கு பறக்கவிட்டார். இதன் மூலம் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிளில் அதிக சிக்ஸ்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். தற்போது அவர் 352 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க : IND vs SA Series: முதல் போட்டியிலேயே வரலாறு படைக்கும் ரோஹித்-கோலி ஜோடி.. எப்படி தெரியுமா?

ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த 5 வீரர்கள்

ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ரோகித் சர்மா பெற்றார். அவர் மொத்தமாக இதுவரை 352 சிக்சர்கள் அடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடி 351 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் 331 சிக்சர்களுடன் 3வது இடத்திலும், இலங்கையின் சனத் ஜெயசூர்யா 270 ரன்களுடன் 4வது இடத்திலும், இந்தியாவின் எம்எஸ் தோனி 229 சிக்சர்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

இந்த போட்டியில் ரோகித் சர்மா தொடர்ந்து மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்தார். கடந்த ஆஸ்திரேலியா தொடரில் இரண்டு அரைசதங்கள் அடித்த அவர், இன்று மிகவும் சிறப்பாக ஆடி தனது 3வது அரை சதத்தை பதிவு செய்தார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து இந்தியாவின் ரன் ரேட்டை உயர்த்தினர். இந்தியா 20 ஓவர்களிலேயே 140 ரன்களைத் தாண்டியது. இந்த நிலையில் மார்கோ ஜேன்சன் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் ரோகித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையும் படிக்க : Gautam Gambhir: தென்னாப்பிரிக்கா தொடர் இழப்பு.. பிரஸ் மீட்டில் கவுதம் கம்பீர் காட்டம்!

விராட் கோலி அதிரடி

விராட் கோலி இன்று துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.  தென் ஆப்பிரிக்க அணியின்  17வது ஓவரில் கோர்பின் போஷ் பந்தில் தொடர்ந்து இரண்டு சிக்ஸ்கள் பறக்கவிட்ட விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் தனது 76வது அரைசதத்தை பதிவு செய்தார். இன்றைய ஆட்டத்தில் கோலியின் டைமிங், ஷாட் தேர்வு இரண்டும் ரசிகர்களை கவர்ந்தது.

Related Stories
T20 World Cup 2026: ஆதிக்கம் செலுத்தும் சிறிய நாடுகள்.. பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து.. லேட்டஸ்ட் புள்ளிகள் அட்டவணை அப்டேட்!
India vs Pakistan 2026: மழையால் தடையா..? இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளில் மோசமான வானிலை.. வெதர் அப்டேட் இதோ!
IPL 2026: ஜடேஜா இல்லை! ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் நியமனம்!
India vs Pakistan 2026: பறக்கப்போகும் பந்து.. தெறிக்கப்போகும் ஸ்டிக்.. நெருங்கும் IND vs PAK போட்டி.. ஆட்டத்தை எங்கு காண்பது?
India vs Pakistan: நெருப்பாக வரும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. மிரட்டப்போக்கும் 8 முக்கிய வீரர்கள்!
T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் அப்செட்! வீழ்ந்த ஆஸ்திரேலியா.. அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே..!
பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்
‘கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு ரூ.2.52 கோடி அபராதம்.. செலுத்தாவிட்டால் 6 மாதம் சிறை.. உயர்நீதிமன்றம்
சத்தமில்லாமல் இந்திய - அமெரிக்க வரத்தக ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்த அமெரிக்கா
மலையாள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ‘ரோஸ்லின்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..