AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: முதல் வெற்றியை நோக்கி கொல்கத்தா.. முதலில் பந்துவீசும் பஞ்சாப்..!

KKR vs PBKS Toss Update: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 6ம் தேதி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

IPL 2026: முதல் வெற்றியை நோக்கி கொல்கத்தா.. முதலில் பந்துவீசும் பஞ்சாப்..!
ஃபின் ஆலன் - அர்ஷ்தீப் சிங்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 06 Apr 2026 19:50 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 6ம் தேதி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (Kolkata Knight Riders) முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளது. டாஸின் போது, ​​கடந்த போட்டியில் சிறப்பான கேட்ச் பிடித்தபோது வருண் சக்ரவர்த்திக்குக் காயம் ஏற்பட்டதால், அவர் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில், சுனில் நரைனுக்கும் உடல்நிலை சரியில்லாததால், ஆடும் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை. வருண் மற்றும் நரைனுக்குப் பதிலாக ரோவ்மன் பவல் மற்றும் நவதீப் சைனிக்கு இடம் கிடைத்துள்ளது. மறுபுறம், பஞ்சாப் அணி தனது ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

ALSO READ: ஐபிஎல்லில் சிஎஸ்கேவை அதிகமுறை ஆல் அவுட் செய்த அணிகள்.. முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்!

வருண் சக்கரவர்த்திக்கு காயம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது பந்துவீச்சாளர்களின் காயங்களால் தவித்து வருகிறது. சீசன் தொடங்குவதற்கு முன்பே, வேகப்பந்து வீச்சாளர்களான ஹர்ஷித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடரிலிருந்து விலக்கப்பட்டனர். அதே சமயம், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரானா இன்னும் முழு உடற்தகுதியுடன் இல்லை. மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தடையில்லாச் சான்றிதழையும் (NOC) இலங்கை கிரிக்கெட் வாரியத்திடமிருந்து பெறவில்லை. தற்போது வருணின் காயம் அணியின் பிரச்சனைகளை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், வருணின் காயத்தின் தீவிரத்தை ரஹானே வெளியிடவில்லை.

இரு அணிகளின் விளையாடும் பிளேயிங் லெவன்:

பஞ்சாப் கிங்ஸ்:

பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கூப்பர் கோனாலி, நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் விஷக், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் சஹால்.

இம்பாக்ட் வீரர்கள் லிஸ்ட்: ப்ரியன்ஷ் ஆர்யா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விஷ்ணு வினோத், பிரவீன் துபே, ஹர்ப்ரீத் ப்ரார்.

ALSO READ: பலத்துடன் பஞ்சாப்.. கொல்கத்தா சொந்த மண்ணில் கெத்து காட்டுமா? யாருக்கு வெற்றி?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஃபின் ஆலன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேமரூன் கிரீன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ரின்கு சிங், ராமந்தீப் சிங், அனுகுல் ராய், நவ்தீப் சைனி, வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி.

இம்பாக்ட் வீரர்கள் லிஸ்ட்: பிளெசிங் முசரபானி, மணீஷ் பாண்டே, தேஜஸ்வி சிங், ராகுல் திரிபாதி, சவுரப் துபே.

Follow Us