IPL 2026: பூட்டப்பட்ட சின்னசாமி ஸ்டேடியம்! ஆர்சிபிக்கு இனி எந்த ஸ்டேடியம்..? கிடைத்த முக்கிய அப்டேட்!

Royal Challengers Bengaluru: ஆர்சிபி நிர்வாகம் ஏற்கனவே சத்தீஸ்கர் கிரிக்கெட் சங்கத்துடன் மைதானம் தொடர்பாக பேசியத்துடன் மேலும் ராய்ப்பூரில் உள்ள மைதானத்தையும் பார்வையிட்டது. இப்போது சத்தீஸ்கர் முதல்வர் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளதால், அங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2026: பூட்டப்பட்ட சின்னசாமி ஸ்டேடியம்! ஆர்சிபிக்கு இனி எந்த ஸ்டேடியம்..? கிடைத்த முக்கிய அப்டேட்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Published: 

16 Jan 2026 08:19 AM

 IST

கடந்த 2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bengaluru) சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது. பெங்களூரு அணியை காண வேண்டும் என்ற அதிக அளவில் கூட்டம் கூடியதால் ஏற்றப்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வேறு எந்த போட்டியும் நடத்தப்படவில்லை. விஜய் ஹசாரே டிராபி போட்டி சின்னசாமி மைதானத்திலிருந்து மாற்றப்பட்ட பிறகு, இந்த 2026ம் ஆண்டு ஐபிஎல் (IPL 2026) சீசனில் போட்டிகள் இங்கு நடத்தப்படாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இப்போது, ​​ஆர்சிபியின் சொந்த மைதானமாக எந்த ஸ்டேடியம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பிபிஎல்-ஐ புறக்கணித்த வீரர்கள்.. வங்கதேசத்தில் நிலவும் குழப்பம்.. பதவி விலகுவாரா பிசிபி தலைவர்?

ஆர்சிபியின் சொந்த ஸ்டேடியம் எது..?


நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம் அல்லது ராய்ப்பூரில் உள்ள ஷாஹித் பிர் நாராயண் சிங் ஸ்டேடியம் ஆர்சிபியின் சொந்த மைதானமாக இருக்கலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிட விரும்பாத ஆர்சிபி அதிகாரி ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில், ”வரவிருக்கும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணி நவி மும்பையில் மொத்தம் 5 போட்டிகளை விளையாடும். அதேநேரத்தில், இரண்டு போட்டிகள் ராய்ப்பூரில் நடைபெறும். அதிகாரிகளுடன் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, சத்தீஸ்கர் முதல்வர் பிஷ்ணு தியோ சாய் இதுகுறித்து கூறுகையில், “நாங்கள் நேற்று அதாவது 2026 ஜனவரி 15ம் தேதி ஆர்சிபி தலைமை நிர்வாக அதிகாரியுடன் பேசினோம். அவர் எங்களை சந்திக்க வந்தார். இரண்டு ஐபிஎல் போட்டிகள் இங்கு நடத்தப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.” பின்னர் அவர் சமூக ஊடகங்கள் மூலம் செய்தியை உறுதிப்படுத்தினார். வாரியத்தின் இணைச் செயலாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா மற்றும் ஐபிஎல் 2025 சாம்பியன் ஆர்சிபி துணைத் தலைவர் ராஜேஷ் மேனனுடன் மரியாதை நிமித்த சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு, ஆர்சிபி ஜெர்சி வழங்கப்பட்டது. மேலும் வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்தத் தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.” என்று கூறினார்.

ஆர்சிபி நிர்வாகம் ஏற்கனவே சத்தீஸ்கர் கிரிக்கெட் சங்கத்துடன் மைதானம் தொடர்பாக பேசியத்துடன் மேலும் ராய்ப்பூரில் உள்ள மைதானத்தையும் பார்வையிட்டது. இப்போது சத்தீஸ்கர் முதல்வர் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளதால், அங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: போட்டிக்கு நடுவே புறா எச்சம்! இந்தியன் ஓபனில் தொடரும் சர்ச்சை.. போட்டி பாதியில் நிறுத்தம்!

ராயஸ்தான் ராயல்ஸ் அணி எங்கு விளையாடும்..?

சில நாட்களுக்கு முன்பு , மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இரண்டும் மைதானத்திற்கு வருகை தந்ததாகவும், புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தை உயர்மட்ட கிரிக்கெட்டுக்கான சிறந்த இடங்களில் ஒன்றாகக் காண்பிப்பதில் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தது.

இருப்பினும், MCA மைதானம் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிகளை மட்டுமே நடத்தும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், RCB போட்டிகள் இரண்டு வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும்.

Related Stories
Washington Sundar: நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.. உலகக் கோப்பைக்கு டவுட்..!
USA U19 vs IND U19: U19 உலகக் கோப்பையில் இந்திய அணி கெத்து.. அமெரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றி!
Indian Open Badminton 2026: போட்டிக்கு நடுவே புறா எச்சம்! இந்தியன் ஓபனில் தொடரும் சர்ச்சை.. போட்டி பாதியில் நிறுத்தம்!
BPL 2026: பிபிஎல்-ஐ புறக்கணித்த வீரர்கள்.. வங்கதேசத்தில் நிலவும் குழப்பம்.. பதவி விலகுவாரா பிசிபி தலைவர்?
U19 World Cup 2026: அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா.. இன்று முதல் அண்டர் 19 உலகக் கோப்பை தொடக்கம்!
IND vs NZ 2nd ODI: இந்தியாவிற்கு எதிராக சதம்.. சம்பவம் செய்த மிட்செல்! நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்