Ravindra Jadeja: ராஜஸ்தான் அணிக்கு ரவீந்திர ஜடேஜா நிபந்தனை.. கேப்டன் பதவியை வழங்குமா நிர்வாகம்..?

Rajasthan Royals: ரவீந்திர ஜடேஜா போன்ற ஒரு அனுபவமிக்க வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜடேஜா அறிமுகமானார். இதனால், அணியுடன் நீண்டகால பந்தமும் உள்ளதால் இந்த கூட்டணி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ravindra Jadeja: ராஜஸ்தான் அணிக்கு ரவீந்திர ஜடேஜா நிபந்தனை.. கேப்டன் பதவியை வழங்குமா நிர்வாகம்..?

ரவீந்திர ஜடேஜா

Published: 

12 Nov 2025 18:58 PM

 IST

ஐபிஎல் 2026 (IPL 2026) வர்த்தக சாளரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் வர்த்தகம் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஐபிஎல் 2026 சீசனுக்கான ஏலத்திற்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தங்களது 2 நட்சத்திர வீரர்களை பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதுதொடர்பான செய்திகள் அவ்வபோது வெளிவருகிறது. இந்தநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான வர்த்தகத்திற்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பு ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) கேப்டன் பதவியை ஒரு நிபந்தனையாக வைத்திருந்ததாகவும், இதற்கு ராஜஸ்தான் அணி ஒப்புக்கொண்டதாகவும் அறிக்கை கூறப்படுகிறது.

ALSO READ: ஐபிஎல் 2026க்கான ஏலம் எப்போது, எங்கு நடைபெறும்? வெளியான தகவல்..!

மீண்டும் கேப்டனாக ஜடேஜா:


ரவீந்திர ஜடேஜா போன்ற ஒரு அனுபவமிக்க வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜடேஜா அறிமுகமானார். இதனால், அணியுடன் நீண்டகால பந்தமும் உள்ளது. சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்ததால், அந்த அணி புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் கடந்த 2021ம் ஆண்டு சீசன் முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இருப்பினும், கடந்த ஐபிஎல் 2025 சீசனில் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனபோது, ​​ரியான் பராக் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இப்படியான சூழ்நிலையில், ஜடேஜாவை தக்க வைத்துக் கொள்ள ஆர்வமாக உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. இது நடந்தால், ரவீந்திர ஜடேஜா ஐபிஎல்லில் இரண்டாவது முறையாக கேப்டனாக இருப்பார். இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஜடேஜா தலைமை தாங்கிய அனுபவம் இருந்தாலும் சிறப்பானதாக இல்லை. முன்னதாக, 2012ம் ஆண்டில் எம்.எஸ். தோனி சிஎஸ்கேவின் கேப்டன் பதவியை விட்டுகொடுத்தபோது, ரவீந்திர ​​ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவரது கேப்டன் பதவியில் அணியின் செயல்திறன் மிகவும் மோசமாக இருந்ததால், 8 போட்டிகளுக்குப் பிறகு சீசனின் நடுப்பகுதியில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ALSO READ: ஏற்றதாழ்வு.. விடாமுயற்சியுடன் போராட்டம்.. சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் பயணம்!

ஜெய்ஸ்வால்-பராக் வாய்ப்பு இல்லை..

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்படவில்லை என்றால், இளம் வீரர்களான ரியான் பராக் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரில் யாரேனுக்கும் கேப்டன் பதவி வழங்கப்படலாம். கடந்த ஐபிஎல் 2025 சீசனில் ரியான் பராக் சில போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த போதிலும், சீசன் முடிந்த பிறகு பல நேர்காணல்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் கேப்டன் பதவிக்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டால், இந்த இருவருக்கான வாய்ப்பு தவறலாம். இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவும் முடிவு இல்லை.