PBKSvGT : கானலி மிரட்டல்… குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

IPL 2026 : ஐபிஎல் 2026 சீசனில் முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுக்க, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. கூப்பர் கானலியின் அரைசதம் காரணமாக அந்த அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

PBKSvGT :  கானலி மிரட்டல்... குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

ஸ்ரேயாஸ் ஐயர் - சுப்மன் கில்

Updated On: 

31 Mar 2026 23:32 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் மாநிலம் முல்லம்பூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியால் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பந்து வீச்சாளர்களின் தாக்குதலால் தாக்கு பிடிக்க முடியவில்லை.  அந்த அணி வீரர்களால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு ரன்கள் ரன்கள் குவிக்க முடியவில்லை.  குஜராத் கேப்டன் சுப்மன் கில் 27 பந்துகளில் அதிரடியாக 39 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் தந்தார். ஆனால் அவருக்கு பின்னால் வந்த வீரர்களால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.

அந்த அணியின் சாய் சுதர்சன் 13 ரன்கள் மட்டுமே எடுத்து விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், நிதானமாக ஆடிய ஜோஸ் பட்லர் 33 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அணியின் சரிவிலிருந்து மீட்டெடுக்க முயன்றார். இருப்பினும், கில் ஆட்டமிழந்த பிறகு, குஜராத் அணியின் பேட்டிங் வரிசை வெகுவாக தடுமாறியது.

இதையும் படிக்க : IPL 2026: தோனியிடம் துளியும் பேசவில்லை.. ஷாக் கொடுத்த ஜடேஜா! ரசிகர்கள் அதிர்ச்சி..!

பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம்

குறிப்பாக பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள்  துல்லியமான பந்துவீச்சின் மூலம் குஜராத் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். அதிரடி பேட்ஸ்மேனான கிளென் பிலிப்ஸ் 25 ரன்கல் எடுத்து  அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றாலும், அவரால் நீண்ட நேரம் நிலைத்து நிற்க இயலவில்லை. வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான் மற்றும் ராகுல் திவாட்டியா போன்ற ‘ஃபினிஷர்கள் என அறியப்படும் வீரர்கள் சோபிக்கத் தவறியதால், குஜராத் அணியால் ஒரு பெரிய ரன் குவிப்பை எட்ட இயலவில்லை.

பஞ்சாப் பந்துவீச்சாளர்களில், விஜய் குமார் வைஷாக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டார். யுஸ்வேந்திர சாஹல் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்கோ ஜான்சன் ஒரு விக்கெட்டை வீழ்த்தித் தனது பங்களிப்பை அளித்தார். இதனையடுத்து அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய பிரசித் கிருஷ்ணா

 

இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஸ் ஆர்யா 7 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால் பிரப்சிம்ரன் சிங் மற்றும் கூப்பர் கானலி இணைந்து குஜராத் பந்துவீச்சாளர்களின் பந்தை 4 புறமும் சிதறடித்தனர். இருவரும் இணைந்து பவர் பிளேயில் சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்தனர். இந்த நிலையில் அதிரடியாக ஆடிய பிரப்சிம்ரன் 24 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிக்க : PSL 2026: போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம்.. சிக்கிய ஷஹீன் அஃப்ரிடி, ஃபகர் ஜமான்!

பின்னர் கானலியுடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். 2 சிக்சர்களுடன் அதிரடியாக துவங்கிய ஸ்ரேயாஸ் ஐயரின் இன்னிங்ஸ் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.அவர் 11 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்த போது நேஹால் வதேரா, ஷஷங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்ன்ஸ் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

குறிப்பாக 10 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை ஜராத்தின் பிரசித் கிருஷ்ணா மாற்றியுள்ளார். ஆனால் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் சிறப்பாக ஆடி கூப்பர் கானலி அரை சதம் கடந்தார். இதனால் அந்த அணி  19.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..