IND vs PAK Asia Cup 2025: இது எங்களுக்கு அவமானம்! இந்திய அணிக்கு எதிராக புகார்.. ஐசிசியிடம் சென்ற பாகிஸ்தான் அணி!

Asia Cup Row Escalates: இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு , கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெற்றியை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார். மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

IND vs PAK Asia Cup 2025: இது எங்களுக்கு அவமானம்! இந்திய அணிக்கு எதிராக புகார்.. ஐசிசியிடம் சென்ற பாகிஸ்தான் அணி!

சல்மான் அலி அகா - சூர்யகுமார் யாதவ்

Published: 

15 Sep 2025 18:17 PM

 IST

2025 ஆசிய கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான போட்டி நேற்று அதாவது 2025 செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team), பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்தது மட்டுமல்லாமல், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்காமல் நகர்ந்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போடும் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கைகுலுக்கவில்லை. அதனை தொடர்ந்து, போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்தனர். இந்திய வீரர்களின் இந்த செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர் . பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் இந்திய அணி மீது முறையான நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் புகார்:


இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்களுடன் கைகுலுக்காததற்காக அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் , பிசிபியின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய அணிக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் அணியின் மேலாளர் நவீத் அக்தர் சிமா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளார்.

ALSO READ: பாகிஸ்தான் வீரர்களை கண்டுகொள்ளாத இந்திய அணி.. புகாரளித்த பாகிஸ்தான்!

இந்திய வீரரின் இந்த நடவடிக்கையால் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் கோபமடைந்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வி வெளியிட்ட சமூக ஊடக பதிவில், “ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் கிரிக்கெட்டின் உத்வேகம் தொடர்பான எம்சிசி சட்டங்களை மீறியதாகக் கூறி, போட்டி நடுவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது. ஆசிய கோப்பையில் இருந்து போட்டி நடுவரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

துபாயில் நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்த பிறகு, இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் வெளியேறினர். வெற்றிக்குப் பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் மைதானத்தை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

ALSO READ: புறக்கணிக்கப்பட்ட பாகிஸ்தான்.. இந்திய அணி செய்தது சரியா? தவறா..? ஐசிசி அபராதம் விதிக்குமா?

இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு , கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெற்றியை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார். மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார் . அறிக்கைகளின்படி , பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாம் என்று இந்திய அணி உயர் வாரிய அதிகாரிகளிடமிருந்து கடுமையான அறிவுறுத்தல்களைப் பெற்று அதற்கேற்ப இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.