MS Dhoni : தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்.. ரசிகர்கள் உற்சாகம்!

ICC Hall of Fame: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெற்றுள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த தோனியின் அற்புதமான கேப்டன்சி மற்றும் கிரிக்கெட் பங்களிப்பைப் பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தோனி, ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெற்ற 11வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்

MS Dhoni : தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்.. ரசிகர்கள் உற்சாகம்!

எம்.எஸ்.தோனி

Updated On: 

13 Jun 2025 16:11 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு (MS Dhoni) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மிகப்பெரிய கௌரவத்தை வழங்கியுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு 3 ஐ.சி.சி விருதுகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனிக்கு, மதிப்புமிக்க ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் (ICC Hall of Fame) இடம் வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்பு நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியின் போது, ​​ஐ.சி.சி உலக கிரிக்கெட்டின் 7 ஜாம்பவான்களுக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம் அளித்து, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், தோனியின் பெயர் முதலில் வந்தது. இதன் மூலம், ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெற்ற 11வது இந்திய கிரிக்கெட் வீரர் (Indian Cricketer) என்ற பெருமையை எம்.எஸ். தோனி பெற்றார்.

ஹால் ஆஃப் ஃபேம்:

ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி., உலக கிரிக்கெட்டின் பல சிறந்த வீரர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம் அளிக்கிறது. இந்த கௌரவம் எதற்கு என்றால் கிரிக்கெட் மரபைப் பாதுகாக்கவும், வருங்கால தலைமுறை கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கவும், கிரிக்கெட் விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற ஜாம்பவான்களை கௌரவிக்கவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த  2009ம் ஆண்டு இதைத் தொடங்கியது. அப்போதிருந்து, இந்த சிறப்பு நிகழ்வை ஐ.சி.சி. ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த முறை இது லண்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சற்று முன்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தாண்டு தோனியை தவிர மேலும் 7 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய வீரர்களுக்கு கௌரவம்:


கடந்த ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் உள்ளிட்ட பல சிறந்த இந்திய வீரர்கள் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த முறை தோனி ஹால் ஆஃப் ஃபேம் என்னும் கௌரவத்தைப் பெற்றார். கடந்த 2004ம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமான எம்.எஸ். தோனி, 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது அற்புதமான கேப்டன்சி, மறக்கமுடியாத வாழ்க்கை மற்றும் கிரிக்கெட்டுக்கான பங்களிப்புக்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டது. இந்தியாவுக்காக 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ். தோனி, 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக வென்று கொடுத்தார். இது தவிர, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முதலிடத்திற்கு அழைத்துச் சென்றார்.

Related Stories
National Sports Policy 2025: நடைமுறைக்கு வரும் தேசிய விளையாட்டு கொள்கை.. ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி அமைச்சரவை..!
India vs England 2nd Test: வெற்றிக்காக 58 ஆண்டுகள் காத்திருப்பு! இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைக்குமா இந்தியா..?
Rishabh Pant: அபாயத்தில் விராட் கோலி ரெக்கார்ட்.. விரட்டி பிடிப்பாரா ரிஷப் பண்ட்..? காத்திருக்கும் 2வது டெஸ்ட்!
Ind vs Eng 2nd Test: 2வது டெஸ்டுக்கான ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து.. அணியில் ஆர்ச்சருக்கு இடமா?
பயிற்சியில் கடுமையாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர்.. 2வது டெஸ்டில் இந்திய அணியில் இடமா..?
IND vs ENG 2nd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் பும்ரா களம்.. உறுதியாக சொன்ன இந்திய உதவி பயிற்சியாளர்!