Mohammed Shami: ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு மறுப்பு.. தேர்வாளர்களிடம் கேள்வி எழுப்பிய முகமது ஷமி!

India Tour of Australia 2025: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும், வருகின்ற 2025 அக்டோபர் 15ம் தேதி தொடங்கும் 2025-26 ரஞ்சி டிராபி சீசனுக்கான பெங்கால் அணியில் ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.

Mohammed Shami: ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு மறுப்பு.. தேர்வாளர்களிடம் கேள்வி எழுப்பிய முகமது ஷமி!

முகமது ஷமி

Published: 

14 Oct 2025 18:51 PM

 IST

டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் (IND vs AUS) வருகின்ற 2025 அக்டோபர் 19 முதல் வருகின்ற 2025 நவம்பர் 8 வரை நடைபெறுகிறது, இதில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் இடம்பெறுகின்றன. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, முகமது ஷமி தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், எந்த வடிவத்திலும் விளையாட தயாராக இருப்பதாகவும் முகமது ஷமி (Mohammed Shami) கூறினார். மேலும், தனது உடற்தகுதி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்திய அணியின் தேர்வாளர்களையும் கடுமையாக விமர்சித்தார்.

முகமது ஷமி கடுமையான சாடல்:


தனது உடற்தகுதி குறித்து பேசிய முகமது ஷமி, “ இந்திய அணி எனது உடற்தகுதி குறித்து என்னிடம் பேசவில்லை. எனது உடற்தகுதி குறித்து அறிக்கை அளிக்கக்கூடிய நபர் நான் அல்ல, 4 நாள் கிரிக்கெட் விளையாட முடிந்தால், ஏன் 50 ஓவர்கள் விளையாட முடியாது? நான் உடற்தகுதி இல்லாமல் இருந்திருந்தால், நான் ரஞ்சி டிராபியில் விளையாடாமல் பெங்களூருவில் என்.சி.ஏவில் இருந்திருப்பேன்” என்று தெரிவித்தார்.

ALSO READ: ஐபிஎல் சூதாட்டம்… தோனிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்:

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும், வருகின்ற 2025 அக்டோபர் 15ம் தேதி தொடங்கும் 2025-26 ரஞ்சி டிராபி சீசனுக்கான பெங்கால் அணியில் ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி, அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணியில் முகமது ஷமி விளையாடுவார்.

மறுபுறம், இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், முகமது ஷமி நீக்கப்பட்டதற்கு வேறு காரணத்தை கூறினார். அதில், கடந்த சில ஆண்டுகளாக முகமது ஷமி அதிகம் கிரிக்கெட் விளையாடவில்லை. தேர்வுக்கு வழக்கமான போட்டி பயிற்சி தேவை என்று கூறினார்.

ALSO READ: வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்.. கேப்டனாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற கில்!

முகமது ஷமி இந்திய அணிக்காக கடைசியாக விளையாடியது எப்போது..?

முகமது ஷமி இந்தியாவுக்காக கடைசியாக கடந்த 2025ம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். முன்னதாக, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.