Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் காத்திருக்கும் ட்விஸ்ட்! மாற்று வீரர்களின் எதிர்காலம் என்ன? தக்கவைக்கப்படுவார்களா?

IPL Replacement Players: 2025 ஐபிஎல் சீசனில் பல அணிகள் காயம் மற்றும் பிற காரணங்களால் மாற்று வீரர்களைச் சேர்த்தன. ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரெவிஸ், ஹர்ஷ் துபே, மயங்க் அகர்வால், உர்வில் படேல் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவர்களது அணிகள் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.

IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் காத்திருக்கும் ட்விஸ்ட்! மாற்று வீரர்களின் எதிர்காலம் என்ன? தக்கவைக்கப்படுவார்களா?
ஆயுஷ் மாத்ரே - மயங்க் அகர்வால் - பிரெவிஸ்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Sep 2025 15:07 PM IST

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் பல அணிகள் காயங்கள் மற்றும் பிற காரணங்களால் தங்கள் அணியில் மாற்று வீரர்களை தேர்வு செய்தனர். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் (Chennai Super Kings) ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரெவிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் (Royal Challengers Bengaluru) மயங்க் அகர்வால் உள்ளிட்ட பல வீரர்கள் வெவ்வேறு அணியில் மாற்று வீரர்களாக களமிறங்கி தாக்கத்தை ஏற்படுத்தினர். இந்தநிலையில், ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பு, மாற்று வீரர்களாக உள்ளே வந்த அந்தந்த அணிகள் இவர்களை தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது. இப்படியான சூழ்நிலையில், 2026 ஏலத்திற்கு முன்பு, ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் தக்கவைக்கப்படக்கூடிய மாற்று வீரர்களின் பட்டியல் குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ஆயுஷ் மாத்ரே (சிஎஸ்கே)

2025 ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியில் காயமடைந்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஆயுஷ் மாத்ரேவை தேர்வு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2026 சீசனின் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இருப்பினும், மாற்று வீரராக உள்ளே வந்த 17 வயதே ஆன ஆயுஷ் மாத்ரே 7 போட்டிகளில் விளையாடி 188.97 ஸ்ட்ரைக் ரேட்டில் 240 ரன்கள் குவித்தார். எனவே, 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு, சிஎஸ்கே அணி ஆயுஷ் மாத்ரேவை தக்கவைக்கும் என நம்பலாம்.

ALSO READ: தோனிக்கு கோபம் வந்தா என்ன நடக்கும் தெரியுமா? – மறக்க முடியாத சம்பவம்!

டெவால்ட் பிரெவிஸ் (சிஎஸ்கே)

2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்றாக தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்தது. தொடக்கம் முதல் வலுவான பேட்டிங் ஆர்டர் இல்லாமல் தவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் போது பிரெவிஸ் பல தாக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். ஐபிஎல் 2025 சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 180.00 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 225 ரன்கள் எடுத்தார். எனவே, பிரெவிஸையும் சிஎஸ்கே தக்க வைக்க விரும்பும்.

ஹர்ஷ் துபே (எஸ்ஆர்ஹெச்)

ஐபிஎல் 2025 சீசனின் நடுப்பகுதியில் ஸ்மரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஹர்ஷ் துபேயை ஒப்பந்தம் செய்தது. ஆல்ரவுண்டரான துபே, உள்நாட்டு கிரிக்கெட்டில் விதர்பாவுக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் 2025 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 9.80 எகானமியுடன் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷ் துபே, 2026 ஏலத்திற்கு முன்பு SRH ஆல் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது.

மயங்க் அகர்வால் (ஆர்சிபி)

ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, காயத்தின் காரணமாக தேவ்தத் படிக்கலுக்குப் பதிலாக மயங்க் அகர்வாலை ஒப்பந்தம் செய்தது. ஐபிஎல் 2025 சீசனில், மயங்க் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 95 ரன்கள் எடுத்தார். அவரது அனுபவத்தையும் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு, 2025 சாம்பியனான ஆர்சிபி ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பு மயங்கைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

ALSO READ: 11 ரசிகர்களின் மரணம்! 20 பேர் காயம்! 3 மாதங்களுக்குப் பிறகு மௌனம் கலைத்த விராட் கோலி

உர்வில் படேல் (சிஎஸ்கே)

இடது கணுக்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்ட வான்ஷ் பேடிக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் உர்வில் படேலை ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் 2025 இல் சிஎஸ்கே அணிக்காக உர்வில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், அவர் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.

3 போட்டிகளில் 22.66 சராசரி மற்றும் 212.50 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 68 ரன்கள் எடுத்த உர்வில், 2026 ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கேவால் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது.