Mumbai Indians: ஐபிஎல் 2026ன் முதல் வர்த்தக ஒப்பந்தம்.. ஷர்துல் தாக்கூரை இணைத்து கொண்ட மும்பை இந்தியன்ஸ்!
Shardul Thakur: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஒரு சுவாரஸ்யமான ஒப்பந்தம் நடந்துள்ளது. அனுபவம் வாய்ந்த இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஷர்துல் தாக்கூர் விளையாடினார்.

ஷர்துல் தாக்கூர்
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முந்தைய வர்த்தக சாளரம் செய்திகளில் உள்ளது. கடந்த சில நாட்களாக வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து ஏராளமான தகவல்கள் வெளிவருகின்றன. இந்தநிலையில், ஐபிஎல் 2026ம் ஆண்டு சீசனின் முதல் வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஒரு சுவாரஸ்யமான ஒப்பந்தம் நடந்துள்ளது. அனுபவம் வாய்ந்த இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur) இப்போது மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியில் இணைந்துள்ளார். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஷர்துல் தாக்கூர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்துல் தாக்கூர் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
லக்னோ அணி யாரை ஒப்பந்தத்தில் மாற்றியது..?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெளிநாட்டு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரைத் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏலத்திற்கு முன்பு தங்கள் பணத்தை அதிகரிக்க, எல்எஸ்ஜி ஷர்துல் தாக்கூரை விடுவிக்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை LSG அணியுடன் வர்த்தகம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, லக்னோ அணி ஒரு வெளிநாட்டு ஆல்ரவுண்டரையும், மாற்று வீரரையும் வாங்க திட்டமிட்டுள்ளது. அர்ஜூன் டெண்டுல்கரின் டெண்டுல்கரின் தற்போதைய சம்பளம் 30 லட்சம் ரூபாய், இது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெரிய தொகையாக இருக்காது. இதன்காரணமாக, மீதமுள்ள 1.70 கோடியில் வேறு வீரரையும் வர்த்தகம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிவில், “இரு அணிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். மும்பை ஆல்ரவுண்டரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18வது சீசனில் ரூ. 2 கோடிக்கு வாங்கியது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி அதே தொகைக்கு ஷர்துல் தாக்கூரை வாங்கியது” என்று தெரிவித்தது.
ஷர்துல் தாக்கூர் ஐபிஎல் வாழ்க்கையில் இது 3வது ஒப்பந்தம்:
ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக ஷர்துல் தாக்கூர் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2017 ஆம் ஆண்டில், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாபிலிருந்து வாங்கியது. பின்னர், 2023 சீசனுக்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை டெல்லி கேபிடல்ஸிடமிருந்து வாங்கியது. இப்போது 2026 சீசனுக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் ஷர்துல் தாக்கூர் இதுவரை 105 போட்டிகளில் விளையாடி 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.