IPL 2026: சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு நிறைவேறுமா..? சமன்பாடு சொல்வது என்ன?

IPL 2026 Chennai Super Kings Playoff Scenario: தொடர்ச்சியாக 3 தோல்விகளுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் இப்போது சிஎஸ்கே அணி தனது கடைசி 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று, 10 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. இதனை தொடர்ந்தும், சிஎஸ்கே-விற்கு வரவிருக்கும் பயணம் முக்கியமானதாக இருக்கும்.

IPL 2026: சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு நிறைவேறுமா..? சமன்பாடு சொல்வது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ்

Published: 

06 May 2026 20:00 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) தொடக்கத்தில் சொதப்பிய 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது ஒரு அற்புதமாக செயல்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டெல்லி அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி தனது 2வது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்தது. 156 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி 18வது ஓவரிலேயே எட்டியது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் கார்த்திக் சர்மா 41 ரன்கள் எடுத்து ஒரு முக்கியமான இன்னிங்ஸை ஆடினார். இந்த ]2 பேட்ஸ்மேன்களின் பார்ட்னர்ஷிப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தது.

ALSO READ: தொடர்ந்து முன்னேறும் சிஎஸ்கே.. புள்ளி பட்டியலில் என்ன நிலைமை?

மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பிய சிஎஸ்கே:

தொடர்ச்சியாக 3 தோல்விகளுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் இப்போது சிஎஸ்கே அணி தனது கடைசி 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று, 10 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. இதனை தொடர்ந்தும், சிஎஸ்கே-விற்கு வரவிருக்கும் பயணம் முக்கியமானதாக இருக்கும். டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சென்னை அணியானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 2 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்படி, ஒன்று சென்னை சேப்பாக்கத்திலும், மற்றொன்றை லக்னோவிலும் விளையாடும். இதற்குப் பிறகு, சென்னை அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் லீக் சுற்றின் கடைசிப் போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இருக்கும். இந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுவது மிக மிக முக்கியம்.

ALSO READ: பிளே ஆஃப்க்கு அலைமோதும் 10 அணிகள்.. எத்தனை போட்டிகளில் எத்தனை வெற்றி வேண்டும்?

பிளேஆஃப்களை செல்வதற்கான சிஎஸ்கே சமன்பாடு:

பிளேஆஃப்களைப் பொறுத்தவரை, நிலைமை தெளிவாக உள்ளது. சிஎஸ்கே தனது மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தது மூன்றிலாவது வெற்றி பெற வேண்டும். அவ்வாறு செய்தால், சென்னை அணி 16 புள்ளிகளைப் பெறும், இது பொதுவாக பிளேஆஃப் இடத்தைப் பிடிக்கப் போதுமானதாகக் கருதப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, சிஎஸ்கே சரியான நேரத்தில் உத்வேகத்தைக் கண்டறிந்துள்ளதுடன், இப்போது மீண்டும் பிளேஆஃப் போட்டியில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. சென்னை அணி எவ்வளவு தூரம் முன்னேறும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..